Dailyhunt
" திமுக கூட்டணி முடிந்துவிட்டது.." காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி..!

" திமுக கூட்டணி முடிந்துவிட்டது.." காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி..!

1News Nation 6 days ago

காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் இன்று செய்தியாளர்கள் திமுக உடனான கூட்டணி தேர்தலுக்கானது, தேர்தல் முடிந்துவிட்டது.. திமுக கூட்டணியும் முடிந்துவிட்டது.. தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து நேற்றே முடிவெடுக்கப்பட்டுவிட்டது.. இந்த முடிவை கிரிஷ் சோடங்கள் இன்று வெளியிடுவார்..

இந்த சட்டமன்ற தேர்தல் திமுக அரசுக்கு எதிரான தேர்தலாக இருந்தது.. அதனால் 15 அமைச்சர்கள் தோல்வி அடைந்தனர்.. பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் எதிரான மனநிலையை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது..

என்.டி.ஏ கூட்டணியின் இடங்கள் 50-க்கும் கீழ் குறைந்துவிட்டது.. பாஜக தமிழ்நாட்டிற்குள் வரக்கூடாது என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர்..
இந்த தேர்தல் மதவாத சக்தி தமிழக மக்கள் இடம் தரமாட்டார்கள் என்பதை காட்டுகிறது.. இந்த செய்தி மிகவும் வலுவான செய்தியாக இருக்கிறது.. பாஜகவுக்கு எதிரான மனநிலை வலுவாக இருக்கிறது..

முதல்வர் ஸ்டாலின் தோல்வி அடைந்தது வருத்தத்திற்குரிய விஷயம்.. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தோல்வி அடைந்தது வருத்தத்திற்கு உரிய விஷயம்.. தமிழக சட்டமன்ற தேர்தலை அரசுக்கு எதிரான முடிவாகவே பார்க்க வேண்டும்..

பாஜக தமிழ்நாட்டிற்குள் வரக்கூடாது என்பது தான் எங்கள் நிலைப்பாடு.. தமிழக மண் மதவாதத்தை ஏற்றுக் கொள்ளாது.. தவெக தலைவர் விஜய், பாஜகவுக்கு எதிரான மனநிலையை கொண்டவர்.. இது தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் உண்மை..” என்று தெரிவித்தார்..

2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.. ஆட்சியமைக்க 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.. எனவே அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை.. மேலும் எனவே தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அடுத்தது தொங்கு சட்டசபை அமையும் என்று கூறப்படுகிறது..

இந்த சூழலில் ஆட்சியமைக்க ஆதரவு கோரி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.. குறிப்பாக அமைச்சரவையில் பங்கு என்ற கோரிக்கை உடன் காங்கிரஸ் தவெக உடன் கூட்டணி அமைக்கும் என்று கூறப்படுகிறது.. இதுகுறித்த அறிவிப்பை இன்று காங்கிரஸ் பொறுப்பாளர் வெளியிட உள்ளார்..

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: 1News Nation