Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
15 வயது சிறுமியை ஊர் ஊராக கூட்டிச் சென்று மாறி மாறி பலாத்காரம்..!! 4 பேர் மீது பாய்ந்தது போக்சோ..!!

15 வயது சிறுமியை ஊர் ஊராக கூட்டிச் சென்று மாறி மாறி பலாத்காரம்..!! 4 பேர் மீது பாய்ந்தது போக்சோ..!!

1News Nation 2 weeks ago

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மாயமான 15 வயது சிறுமியை மீட்ட காவல்துறையினர், அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் 3 பேரை கைது செய்தனர்.

பெற்றோரை இழந்த நிலையில் தனது தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்த அந்த சிறுமி, கடந்த ஜூலை 19-ஆம் தேதி திடீரென வீட்டிலிருந்து மாயமானார். இதுகுறித்து சிறுமியின் தாத்தா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த எடையூர் காவல் நிலைய போலீசார், தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் 10 நாட்களுக்குப் பிறகு சிறுமியைப் பத்திரமாக மீட்டு விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில், சிறுமியின் சூழ்நிலையைப் பயன்படுத்திப் பலரும் அவருடன் நட்பை ஏற்படுத்தி, தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்தது வெளிச்சத்திற்கு வந்தது. இந்த கொடூர சம்பவத்தில் விமல்ராஜ், மருத்துவமனை வார்டு ஊழியரான முத்துக்குமரன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விஜய் மற்றும் சங்கரய்யா ஆகிய 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதில் சங்கரய்யா என்பவர் சிறுமியை திருப்பூருக்கு அழைத்துச் சென்று பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், விமல்ராஜ், முத்துக்குமரன் மற்றும் சங்கரய்யா ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விஜயை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதியின் முடிவால் தான் தமிழகத்திற்கு இந்த நிலைமை..!! வறுத்தெடுத்த அமைச்சர் நிர்மல் குமார்..!!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: 1News Nation