Dailyhunt
ஆரம்பமே இப்படியா..? தவெக அமைச்சர் கீர்த்தனா MLA-வாக பதவி ஏற்கவில்லை..! என்ன காரணம்..?

ஆரம்பமே இப்படியா..? தவெக அமைச்சர் கீர்த்தனா MLA-வாக பதவி ஏற்கவில்லை..! என்ன காரணம்..?

1News Nation 1 week ago

தமிழ்நாடு முதல்வராக விஜய் நேற்றைய தினம் பதவியேற்றார். அதைத் தொடர்ந்து 17-வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று கூடியது. இன்றைய தினம் தற்காலிக சபாநாயகர் கருப்பையா அனைத்து எம்எல்ஏக்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலில் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ முதலமைச்சர் விஜய் உறுதி மொழி ஏற்று பதவி ஏற்றார்.

அதனை தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் உள்ளிட்ட தவெக அமைச்சர்கள் பதவி ஏற்றனர். ஆனால் அமைச்சராக பதவி எற்ற சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ எஸ். கீர்த்தனா பதவி ஏற்க வில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற சான்றிதழை எடுத்துவராததால் எம்.எல்.ஏ-வாக பதவி ஏற்க முடியவில்லை. தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாஜி அமைச்சர்கள் எம்.எல்.ஏ வாக பதவி ஏற்றனர்.

தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அரசில், கட்சித் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற அதே நாளில் அமைச்சராக எஸ். கீர்த்தனா பதவியேற்றார். ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் புதிய அமைச்சரவையில் இடம்பெற்ற 9 அமைச்சர்களில் இவரும் ஒருவர் ஆவார். அதிமுகவின் கோட்டையாக அறியப்படும் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் பெண் எம்.எல்.ஏ என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: 1News Nation