Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆசிய விளையாட்டு மற்றும் டைமண்ட் லீக் தொடரிலிருந்து நீரஜ் சோப்ரா விலகல்!. என்ன காரணம்?

ஆசிய விளையாட்டு மற்றும் டைமண்ட் லீக் தொடரிலிருந்து நீரஜ் சோப்ரா விலகல்!. என்ன காரணம்?

1News Nation 2 weeks ago

இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, பயிற்சியின் போது ஏற்பட்ட கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் டைமண்ட் லீக் இறுதிப் போட்டியிலிருந்து விலகியுள்ளார். மருத்துவ ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த சீசனின் மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

காயமும் விலகலுக்கான காரணமும்: சமீபத்தில் நடைபெற்ற லாசேன் (Lausanne) டைமண்ட் லீக் போட்டியில் 88.05 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இந்த ஆண்டின் தனது சிறந்த திறனை வெளிப்படுத்தி நீரஜ் சோப்ரா இரண்டாம் இடம் பிடித்தார். பழைய ஃபார்முக்குத் திரும்பி வந்த நேரத்தில், பயிற்சியின் போது எதிர்பாராதவிதமாகக் கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து பேசிய நீரஜ் சோப்ரா, “கடின உழைப்பிற்குப் பிறகு லாசேனில் மீண்டும் எனது ஃபார்மைப் பெற்றது போன்ற உணர்வு கிடைத்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக கணுக்காலில் தசைநார் கிழிவு ஏற்பட்டுள்ளது. எனது மருத்துவர் மற்றும் பயிற்சியாளர்களுடன் ஆலோசித்த பிறகு இந்த சீசனில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளேன். பழைய ஃபார்முக்குத் திரும்பிய நேரத்தில் இது ஏமாற்றமளித்தாலும், விளையாட்டுப் பயணத்தில் பின்னடைவுகள் இயல்பானவை. எனது கவனம் முழுவதும் காயத்திலிருந்து மீண்டு வந்து மீண்டும் வலுவாகக் களம் இறங்குவதில்தான் உள்ளது” என நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

2026 சீசனில் நீரஜ் சோப்ராவின் செயல்பாடு:

தோஹா டைமண்ட் லீக்: 4-வது இடம்.

காமன்வெல்த் போட்டிகள்: 2-வது இடம் (வெள்ளிப் பதக்கம்).

லாசேன் டைமண்ட் லீக்: 88.05 மீட்டர் எறிந்து 2-வது இடம் (இலங்கையின் ருமேஷ் தரங்கா 88.14 மீட்டர் எறிந்து முதலிடம் பிடித்தார்).

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கமும் (2021), பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளியும் (2024) வென்று இந்திய விளையாட்டு உலகின் முக்கிய அடையாளமாகத் திகழும் நீரஜ் சோப்ராவின் இந்தத் திடீர் விலகல், வரவிருக்கும் தொடர்களில் இந்தியாவிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: 1News Nation