Dailyhunt
ஆதவ் அர்ஜூனா வேட்புமனு பரீசீலனை நிறுத்தம்.. 35 நிறுவனங்கள் மற்றும் வருமானத்தை மறைத்ததாக குற்றசாட்டு!

ஆதவ் அர்ஜூனா வேட்புமனு பரீசீலனை நிறுத்தம்.. 35 நிறுவனங்கள் மற்றும் வருமானத்தை மறைத்ததாக குற்றசாட்டு!

1News Nation 1 week ago

ஆதவ் அர்ஜூனா தனது நிறுவனங்கள் பலவற்றை வேட்புமனுவில் மறைத்துள்ளதாக சுயேட்சைகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வேட்புமனு பரீசீலனை நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.. இதுவரை சுமார் 7500 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜுனா கடந்த 30 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் இன்று வேட்புமனுக்கள் மீதான பரீசீலனை தொடங்கியது.

அப்போது ஆதவ் அர்ஜூனா தனது நிறுவனங்கள் பலவற்றை வேட்புமனுவில் மறைத்துள்ளதாக சுயேட்சைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆதவ் மனைவி தொடர்புடைய 35 நிறுவனங்கள் வேட்புமனுவில் மறைக்கப்பட்டதாகவும், வங்கி வைப்புத்தொகை மற்றும் வருமானம் மறைக்கப்பட்டதாகவும், ரூ. 2 கோடி ரொக்கமாக ஆதவ் வைத்துள்ளதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும் Jeep Wrangler , Land Rover ஆகிய சொகுசு கார்களின் விவரங்களை ஆதவ் குறிப்பிடவில்லை. சுயேட்சைகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆதவ் அர்ஜூனா வேட்புமனு பரீசீலனை நிறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு ஏற்கப்பட்டது. இந்த தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து மொத்தம் 66 பேர் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. அதேபோல் கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி, சாத்தூரில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்தின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

தர்மபுரியில் பாமக சார்பில் போட்டியிடும் சவுமியா அன்புமணி வேட்புமனு ஏற்கப்பட்டது. வேட்புமனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 9ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு ஏற்கப்பட்டதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

: Breaking : பெரம்பூரில் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்பு..! பல சர்க்கைகளுக்கு மத்தியில் தேர்தல் அலுவலர் அறிவிப்பு..!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: 1News Nation