Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பெரும்பான்மை கிடைக்காமல் தவிக்கும் விஜய்..! தவெகவுக்கு ஆதரவா..? கம்யூனிஸ்ட் கட்சிகள் விளக்கம்..!

பெரும்பான்மை கிடைக்காமல் தவிக்கும் விஜய்..! தவெகவுக்கு ஆதரவா..? கம்யூனிஸ்ட் கட்சிகள் விளக்கம்..!

1News Nation 3 weeks ago

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்றுள்ளது.. இதன் மூலம் 59 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கபப்ட்டுள்ளது.. முதல் தேர்தலிலேயே வெற்றி வாகை சூடிய தவெக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உயர்ந்துள்ளது.

ஆனாலும் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தவெகவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.. அதாவது, மொத்தம் உள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஒரு கட்சி தனிப் பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க முடியும்.. ஆனால் தவெக 108 தொகுதிகளில் தான் முன்னிலை வகிக்கிறது. எனவே தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அடுத்தது தொங்கு சட்டசபை அமையும் என்று கூறப்படுகிறது. எனவே விஜய் ஆட்சி அமைக்க வேறு கட்சிகளின் ஆதரவு தேவை.. நடந்து முடிந்த தேர்தலில் தலா 2 தொகுதிகளில் சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன..

இந்த நிலையில் விஜய்க்கு ஆதரவு அளிப்பது குறித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் விளக்கம் அளித்துள்ளன.. இதுகுறித்து அந்த கட்சிகள் விளக்கம் அளித்துள்ளன.. அதன்படி ” கூட்டணி ஆட்சி அமைக்க இதுவரை தவெகவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை.. தமிழக வெற்றிக் கழகம் அழைத்தால், மாநில நிர்வாகக் குழு ஆலோசனை நடத்தும்.. இந்த கூட்டத்தில் தவெகவுக்கு ஆதரவா..? இல்லையா..? என்பது குறித்து ஆலோசனை நடத்தபப்டும்.. என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: 1News Nation