Dailyhunt
பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு ஆதரவா..? திருமா சொன்ன பரபரப்பு பதில்..!

பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு ஆதரவா..? திருமா சொன்ன பரபரப்பு பதில்..!

1News Nation 1 week ago

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்றுள்ளது.. முதல் தேர்தலிலேயே வெற்றி வாகை சூடிய தவெக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உயர்ந்துள்ளது. ஆனாலும் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தவெகவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.. அதாவது, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஒரு கட்சி தனிப் பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க முடியும்.. ஆனால் தவெக 108 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றுள்ளது.. எனவே தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அடுத்தது தொங்கு சட்டசபை அமையும் என்று கூறப்படுகிறது..

இந்த நிலையில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்களுடன் விஜய் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.. ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கு அழைப்பு விடுப்பது என்பது குறித்து அவர் ஆலோசித்து வருகிறார்..

இந்த நிலையில் தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ” தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணியை வீழ்த்துவது தான் எங்கள் இலக்கு.. அதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.. தவெகவுக்கு எதிராக நாங்கள் பிரச்சாரம் செய்யவில்லை.. எங்கள் இலக்கு அதிமுக – பாஜகவை வீழ்த்துவது தான்.. அந்த வகையில் நாங்கள் முன்னெடுத்த முயற்சி வெற்றி பெற்றதாக எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம்.. அதற்கு தமிழக மக்களுக்கு எங்கள் நன்றியை உரித்தாக்குகிறோம்..

வரும் 7ம் தேதி இடதுசாரிகள், விசிக இணைந்து மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம்.. கேஸ் சிலிண்டர் விலை உயர்வு ஆகிய விஷயங்களை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற உள்ளன..

பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தவெகவுக்கு ஆதரவு அளிப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் ” இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் நீண்டகாலமாக அரசியல் களத்தில் இணைந்தே பயணித்து வருகிறோம்.. எதிர்காலத்திலும் அரசியல் முடிவுகளை இணைந்தே எடுப்போம்.. தவெகவுக்கு ஆதரவு வழங்குவது குறித்து நாங்கள் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை..” என்று கூறினார்..

"விஜய் எங்கள் வீட்டு பிள்ளை.." தவெகவுக்கு ஆதரவா..? பிரேமலதா பரபரப்பு பதில்..!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: 1News Nation