கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
இந்த சூழலில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,11,600க்கு விற்பனையானது..
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை குறைந்துள்ளது.. அதன்படி, இன்று காலை கிராமுக்கு ரூ.100 குறைந்த நிலையில் தற்போது ரூ.200 குறைந்து ரூ.13,750க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.1600 குறைந்து ரூ.1,10,000க்கும் விற்பனையாகிறது.. எனவே இன்று ஒரே நாளில் ரூ.2400 தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்…
வெள்ளி விலையை பொறுத்தவரை இன்று காலை நிலவரமே தொடர்கிறது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ. 2.55 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
அடுத்த ஷாக்.. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய இந்தியன் ஆயில் நிறுவனம்.. ஒரு லிட்டர் எவ்வளவு..?

