Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
BREAKING | குட் நியூஸ்..!! கர்நாடகாவின் கபினி அணையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு..!!

BREAKING | குட் நியூஸ்..!! கர்நாடகாவின் கபினி அணையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு..!!

1News Nation 3 weeks ago

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கபினி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் கபினி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 15,675 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி முதற்கட்டமாக கபினி அணையில் இருந்து விநாடிக்கு 8,000 – 10,000 கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

அணை வேகமாக நிரம்பி வருவதை அடுத்து, காவிரி ஆற்றுப்படுகை மற்றும் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, இயற்கை என்பது ஒருபோதும் யாருக்கும் சொந்தமானது அல்ல; அணைகளில் அளவுக்கு அதிகமாக நீரை தேக்கி வைத்தால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேசியிருந்த நிலையில், தற்போது அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கருணாநிதியின் முடிவால் தான் தமிழகத்திற்கு இந்த நிலைமை..!! வறுத்தெடுத்த அமைச்சர் நிர்மல் குமார்..!!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: 1News Nation