Dailyhunt
BREAKING| முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்..!

BREAKING| முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்..!

1News Nation 4 days ago

தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில் முதலமைச்சர் பதவியை மு.க.ஸ்டாலின்ராஜினாமா செய்தார்.

2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள், யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு அரசியல் சூழலை தலைகீழாக மாற்றியுள்ளன. குறிப்பாக திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தது மிகப்பெரிய அதிர்ச்சியாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் தபால் வாக்குகளில் முன்னிலை பெற்றிருந்த அவர், அடுத்தடுத்த சுற்றுகளில் பின்தங்க தொடங்கி, இறுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் தோல்வியை சந்தித்தார்.

கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற மு.க. ஸ்டாலின், கடந்த முறை அதே தொகுதியிலிருந்து வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி ஏற்றார். ஆனால் இந்த முறை அந்த கோட்டையே சரிந்துள்ளது. இது அரசியல் வட்டாரங்களிலும், திமுக ஆதரவாளர்களிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தேர்தலில் முதல் முறையாக களம் கண்ட தவெக 233 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணிக்கு 73 இடங்களும் அதிமுக கூட்டணிக்கு 53 இடங்களும் கிடைத்துள்ளன. தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில் முதலமைச்சர் பதவியை மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு அனுப்பி வைத்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: 1News Nation