Dailyhunt
Flash : முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேரும் விடுதலை.. செம்மண் குவாரி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு..!

Flash : முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேரும் விடுதலை.. செம்மண் குவாரி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு..!

1News Nation 1 week ago

2006 - 2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி, கனிமவள அமைச்சராக இருந்தவர் பொன்முடி.. அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக செம்மண் வெட்டி எடுத்ததில் அரசுக்கு சுமார் ரூ.28 கோடி இழப்பு ஏற்பட்டதாக பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்ட வழக்குப்பதிவு செய்தது.

இதையடுத்து செம்மண் முறைகேடு மூலம் பெற்ற தொகையை வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாக பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கை சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.

இதனிடையே செம்மண் குவாரி வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.. இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை கடந்த அக்டோபர் மாதம் முடிவடைந்தது.. 57 சாட்சிகளில் 30 பேர் அரசு தரப்பு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் நிறைவடைந்தது.. இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார்..

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.. அதன்படி செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் பொன்முடி, அவரது மகன் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். போதிய சாட்சிகள் இல்லாததால் 7 பேரும் விடுவிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்..

நடுங்க வைத்த சாத்தான்குளம் கொலை வழக்கு.. 9 பேருக்கான தண்டனை விவரம் மீண்டும் ஒத்திவைப்பு..!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: 1News Nation