Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Flash : நகைப்பிரியர்களுக்கு ஷாக்..! இன்றும் தங்கம் விலை உயர்வு..! எவ்வளவு தெரியுமா..?

Flash : நகைப்பிரியர்களுக்கு ஷாக்..! இன்றும் தங்கம் விலை உயர்வு..! எவ்வளவு தெரியுமா..?

1News Nation 2 weeks ago

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.

அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி, தங்கம் விலை இன்று ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து, ரூ.14,150-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,13,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.270க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி, ரூ.2.70 லட்சத்திற்கு விற்பனையாகிறது..

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: 1News Nation