Dailyhunt
Flash : திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்..! களைகட்டும் தேர்தல் களம்..!

Flash : திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்..! களைகட்டும் தேர்தல் களம்..!

1News Nation 2 weeks ago

தமிழகத்தில் வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. வாக்கு எண்ணிக்கை 4-ம் தேதி நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தவெகவும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது..

அந்த வகையில் தவெக சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.. அதன்படி பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.. மேலும் கடந்த 30-ம் தேதி பெரம்பூரில் விஜய் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.. அன்றைய தினமே பெரம்பூரில் இருந்து தனது பிரச்சாரத்தையும் விஜய் தொடங்கினார்..

பெரம்பூரில் திமுக அரசை குற்றம்சாட்டிய விஜய் தவெகவுக்கு இந்த தேர்தலில் ஒரே ஒரு முறை வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறினார்.. தொடர்ந்து கொளத்தூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிகமான கூட்டம் கூடியதால் போலீசார் கூறியதை அடுத்து 4 நிமிடங்களில் பேச்சை முடித்துக் கொண்டார் விஜய். மேலும் வில்லிவாக்கம் சிட்கோ நகர், அண்ணாநகர் ஆகிய இடங்களில் விஜய் பரப்புரை செய்யவில்லை.. அன்றைய தினம் அறிவிக்கப்பட்ட 4 இடங்களில் 2 இடங்களில் விஜய் பிரச்சாரம் செய்யவில்லை. முதல் நாளிலேயே விஜய் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..

இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய தவெக தலைவர் விஜய் தனி விமானம் மூலம் திருச்சி சென்றார்.. திருச்சி விமான நிலையத்தில் இருந்து ரோடு ஷோவாக சென்றார்.. அப்போது திரளான தொண்டர்கள் அவருக்கு உற்சாகம் அளித்தனர்.. தொண்டர்களுக்கு கையசைத்த படியே விஜய் தனது பிரச்சார வாகனத்தில் சென்றார்..

பாலக்கரை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற தவெக தலைவர் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்தார்.. இதை தொடர்ந்து திருச்சியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார்..

திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ், அதிமுக சார்பில் ராஜசேகரன், நாம் தமிழர் சார்பில் கிருஷ்ணசாமி ஆகியோர் களமிறங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சி மேலிடம் சொல்லியும் கேட்காத அண்ணாமலை.. தேர்தலில் போட்டியிடவில்லை என உறுதி.. இதுதான் முக்கிய காரணமாம்..!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: 1News Nation