Dailyhunt
இன்றே கடைசி.. தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாலையுடன் நிறைவு..!

இன்றே கடைசி.. தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாலையுடன் நிறைவு..!

1News Nation 3 weeks ago

தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தனர். இதற்கிடையே தேர்தலுக்கான மிக முக்கியமான கட்டமான வேட்புமனு தாக்கல் தொடங்கிறது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அந்தந்த தொகுதியில் தேர்தல் நடந்தும் அலுவலர்களிடம் தங்களது மனுக்களை தாக்கல் செய்து வந்தனர்.

கடந்த மார்ச் 30-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், இடையில் வந்த அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து இறுதி நாளை எட்டுகிறது. மனு தாக்கல் செய்ய விரும்புவோருக்கு இன்று ஒரு நாள் மட்டுமே கடைசி வாய்ப்பாகும். இதுவரை 3,414 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனர். அதில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், த.வெ.க மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலோர் அடங்குவர்.

இன்று மனுத்தாக்கல் முடிந்தவுடன், தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். தகுதியற்ற மற்றும் பிழையுள்ள மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். ஏப்ரல் 9 ஆம் தேதி வியாழன் கிழமை வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் சுயேச்சைகளுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வப் பட்டியல் வெளியாகும்.

வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் உள்ள தேர்தல் அலுவலகங்களில் வழக்கத்தை விட அதிகக் கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தாலுகா அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களுக்கு வெளியே கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

: கருடன் கொண்டு வந்த தெய்வீக மலை… திருமணத் தடைகள் அகலும் தென் திருப்பதி! எங்க இருக்கு தெரியுமா?

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: 1News Nation