Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கொளத்தூர் தேர்தல் தோல்வி!. மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்!.

கொளத்தூர் தேர்தல் தோல்வி!. மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்!.

1News Nation 1 week ago

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் தோல்வி மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்ததாகக் கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி: சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, வி.எஸ். பாபு 82,997 (45.09%) வாக்குகளும், மு.க.ஸ்டாலின் 74,202 (40.32%) வாக்குகளும் பெற்றனர். இந்த தோல்வியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

மனுவில் மு.க.ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுகள்: மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மே 7-ஆம் தேதி வாக்குப்பதிவு எந்திரங்களைச் சரிபார்க்கக் கோரி ஸ்டாலின் விண்ணப்பித்தார். ஜூலை 29 முதல் நடைபெற்ற சரிபார்ப்பு ஆய்வில், தனது பிரதிநிதியான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முன்னிலையில் 14 EVM எந்திரங்கள் பரிசோதிக்கப்பட்டன.

அப்போது சில வி.வி.பி.ஏ.டி எந்திரங்கள் வேலை செய்யவில்லை என்றும், எந்திரங்களின் முகவரி சீட்டுகளில் குளறுபடிகள் இருந்ததாகவும், ஒரு கட்டுப்பாட்டு எந்திரம் வேட்பாளரின் பெயரையே கண்டறியவில்லை என்றும் புகார்கள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்கப்பட்டும், எவ்வித தெளிவான விளக்கமும் அளிக்கப்படாமல் “சரிபார்ப்பு பணி வெற்றிகரமாக முடிந்தது” என ஆகஸ்ட் 5-இல் சான்றிதழ் அளிக்கப்பட்டதாக ஸ்டாலின் சாடினார்.

இதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும், கொளத்தூர் தொகுதியில் 100% வி.வி.பி.ஏ.டி தாள்களை மீண்டும் எண்ணித் தேர்தல் முடிவை ஆய்வு செய்யக் கோரியும் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதி காரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. விசாரணையின் போது, சட்டப்படி தேர்தல் வழக்கை தாக்கல் செய்யாமல், ரிட் மனுவாகத் தாக்கல் செய்தது ஏன் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் அமர்வு, இந்த மனுவை சட்டப்படி பரிசீலிக்க முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்தது. இதற்கான விரிவான உத்தரவு பின்னர் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: 1News Nation