Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ..! சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க தடை..

குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ..! சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க தடை..

1News Nation 1 week ago

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றால அருவியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி மற்றும் பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து முக்கிய அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அருவிகளில் குளிக்க தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், ஆற்றங்கரை மற்றும் அருவிப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நீர்வரத்து குறைந்து, குளிப்பதற்குப் பாதுகாப்பான சூழல் திரும்பிய பின்னரே சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்

Also Read:ஆடையில் இருந்து வீசிய துர்நாற்றம்… லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய திரிஷா!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: 1News Nation