Dailyhunt
"முதலமைச்சர் ஸ்டாலினே கொரோனாவில் போயிருப்பாரு.." இபிஎஸ் சர்ச்சை பேச்சு..!

"முதலமைச்சர் ஸ்டாலினே கொரோனாவில் போயிருப்பாரு.." இபிஎஸ் சர்ச்சை பேச்சு..!

1News Nation 3 weeks ago

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசமை இன்று சென்னை தி.நகரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் " தமிழ்நாடு அணியா டெல்லி அணியா என்று ஸ்டாலின் கேட்கிறார்.. டெல்லி என்றாலே ஸ்டாலினுக்கு பயம் வந்துவிடுகிறது.. ஸ்டாலின் அவர்களே.. இது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. தமிழ்நாட்டுக்கு வாங்க. திமுக அரசு மீது மக்கள் வெறுப்போடு.. எப்போது தேர்தல் நாள் வரும், ஸ்டாலின் அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராகி விட்டனர்..

ஸ்டாலின் தப்பித்தவறி ஆட்சிக்கு வந்துவிட்டார்.. ஆட்சி செய்ய தெரியாதவரிடம் மக்கள் மாட்டிக் கொண்டு படாத பாடு படுகின்றனர்.. எங்களை பற்றி விமர்சனம் செய்ய ஸ்டாலினுக்கு என்ன அருகதை இருக்கிறது..?

சென்னை மாவட்டத்தில் வறட்சியால் தண்ணீர் கிடைக்காத போது கூட வெளி மாவட்டங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து தாகத்தை தீர்த்த அரசு அதிமுக அரசு.. கொரோனா காலத்தில் மக்களை காத்த அரசு அதிமுக அரசு.. வல்லரசு நாடுகளில் கூட கொரோனா பரவலில் இருந்து மக்களை பாதுகாக்க முடியவில்லை.. ஆனால் அப்படிப்பட்ட சோதனையான நேரத்தில் கூட திறமையாக செயல்பட்டு மக்களை காத்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம்..

திமுக காலத்தில் வெள்ளம் வந்ததா? வறட்சி வந்ததா? புயல் வந்ததா? கொரோனா வந்ததா? ஒன்றும் வரவில்லை.. அப்படி வந்திருந்தால் இந்த முதலமைச்சரே கொரோனாவில் காணாமல் போயிருப்பார்.. இவரே அந்த கொரோனாவிலேயே போயிருப்பார்..

உண்மை பேசினால் ஸ்டாலின் பதறுகிறார்.. அதனால் தான் பச்சைப்பொய் பழனிசாமி என்று கூறுகிறார்.. குழந்தைகள், மூதாட்டிகளை கூட விட்டு வைக்காத கேவலமான ஆட்சி தான் திமுக தான்.. திமுக ஆட்சியில் போதை பொருள் விற்பனை அமோகமாக இருக்கிறது. அதை கட்டுப்பட்டுத்த தவறிய அரசாங்கம் தான் ஸ்டாலின் அரசு.. அதை எல்லாம் கட்டுப்படுத்த துப்பில்லாத ஒரு முதலமைச்சர் என்னைப் பற்றி விமர்சனம் செய்ய அருகதை உண்டா..?

அதிமுக ஆட்சியின் போது நல்லாட்சியை கொடுத்தோம். விலைவாசி ஏறாமல் பார்த்து கொண்டோம்.. இன்றைய விலைவாசி எல்லாம் உயர்ந்துவிட்டது.. இதைப்பற்றி முதலமைச்சருக்கு கவலை இல்லை.. நாட்டை பற்றி கவலைப்படாத முதல்வர், வீட்டைப் பற்றி கவலைப்படும் முதல்வர் இந்த நாட்டுக்கு தேவையா..? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனாவில் போயிருப்பாரு என்று இபிஎஸ் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.. அவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..

பாஜகவின் தூண்டுதலின் பேரில் தலைமை செயலாளர் மாற்றம்.. இது ஆணவத்தின் உச்சக்கட்டம்.. தேர்தல் ஆணையத்தை விளாசிய ஸ்டாலின்..!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: 1News Nation