Dailyhunt
நடுங்க வைத்த சாத்தான்குளம் கொலை வழக்கு.. 9 பேருக்கான தண்டனை விவரம் மீண்டும் ஒத்திவைப்பு..!

நடுங்க வைத்த சாத்தான்குளம் கொலை வழக்கு.. 9 பேருக்கான தண்டனை விவரம் மீண்டும் ஒத்திவைப்பு..!

1News Nation 1 week ago

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். 2020-ம் ஆண்டில் கொரோனா ஊரடங்கில் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று இரவு முழுவதும் போலீசார் கொடூரமாக தாக்கியதில் ஜெயராஜ், பெனிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்..

இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. இதில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் - இன்ஸ்பெக்டர்கள் ரகு, கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் சிபிஐ 2427 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் சம்பவத்தின் தீர்ப்பு மார்ச் 23 ஆம் தேதி வழங்கப்பட்டது. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் காவலர்கள் 9 பேரும் குற்றவாளிகள் என்று மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்டோர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்..

இந்த வழக்கு கடந்த 30-ந்தேதி அன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய, மாநில அரசுகள் முறையாக அறிக்கை தாக்கல் செய்யாமல் அவகாசம் கோரின. இதனால் இந்த வழக்கை இன்றைக்கு நீதிபதி ஒத்திவைத்தார். குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை விபரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை வழங்க வேண்டும் என்று சிபிஐ தரப்பு கோரியது. இந்த நிலையில், தந்தை மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருக்கும் 9 பேருக்கும் ஏப்ரல் ஆறாம் தேதி திங்கள் கிழமை தண்டனை விபரங்கள் வெளியிடப்படும் என நீதிமன்றம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

: 40 வயதில் கூட உங்க முகத்தில் சுருக்கங்கள் வராது.. தினமும் இந்த ஜூஸ் குடிங்க!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: 1News Nation