Dailyhunt
ரிஸ்க் இல்லாத முதலீடு.. மாதம் ரூ.5,550 வருமானம்.. MIS திட்டத்தில் இத்தனை நன்மைகளா..?

ரிஸ்க் இல்லாத முதலீடு.. மாதம் ரூ.5,550 வருமானம்.. MIS திட்டத்தில் இத்தனை நன்மைகளா..?

1News Nation 1 week ago

உலகளவில் அரசியல் பதற்றம் அதிகரித்து, குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் போர்சூழல் பங்குச் சந்தைகளில் அதிர்வுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்புகளைத் தேடி வருகின்றனர். இந்த சூழலில், ஆபத்தில்லா வருமானத்திற்கான விருப்பமாக தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் மீண்டும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அவற்றில் முக்கியமானதாகக் கருதப்படுவது தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (MIS). இந்த திட்டம், குறிப்பாக ஓய்வு பெற்றவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் நிலையான மாத வருமானத்தை நாடும் முதலீட்டாளர்களுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

* இந்த திட்டத்தில் ஒரு முறை தொகை வைப்பு செய்தால், 5 ஆண்டுகள் காலத்திற்கு அது பாதுகாப்பாக இருக்கும்

* வைப்பு செய்த அடுத்த மாதத்திலிருந்தே மாதாந்திர வட்டி வருமானம் கிடைக்கும்.

* தற்போதைய வட்டி விகிதம்: 7.4% (வருடத்திற்கு)

* அரசாங்க ஆதரவு இருப்பதால், மூலதனம் முழுமையாக பாதுகாப்பாக இருக்கும்.

எவ்வளவு முதலீடு - எவ்வளவு வருமானம்?

₹1 லட்சம் முதலீடு → மாதம் ₹600+
₹5 லட்சம் முதலீடு → மாதம் ₹3,000+
₹9 லட்சம் முதலீடு → மாதம் சுமார் ₹5,550

இந்தத் திட்டத்தை குறைந்தபட்சம் 1,000 ரூபாயுடன் தொடங்கலாம். ஒரு கணக்கில் அதிகபட்சமாக ரூ. 9 லட்சம் டெபாசிட் மற்றும் கூட்டுக் கணக்கில் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் நிதியை எடுக்கலாம் அல்லது தொடர்ச்சியான மாதாந்திர வருமானத்தை உறுதி செய்ய அவற்றை மீண்டும் முதலீடு செய்யலாம். மாதந்தோறும் நிலையான வருமானம் தேடும் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நம்பகமான தேர்வாக நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

: தீவிரமடையும் போர்..! ஈரான் உளவுத்துறைத் தலைவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்..!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: 1News Nation