Dailyhunt
ஸ்டாலின் முதல் பிடிஆர் பழனிவேல்ராஜன் வரை.. மண்ணை கவ்விய திமுக அமைச்சர்கள்..! எந்தெந்த தொகுதியில் தெரியுமா..?

ஸ்டாலின் முதல் பிடிஆர் பழனிவேல்ராஜன் வரை.. மண்ணை கவ்விய திமுக அமைச்சர்கள்..! எந்தெந்த தொகுதியில் தெரியுமா..?

1News Nation 6 days ago

2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள், யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு அரசியல் சூழலை தலைகீழாக மாற்றியுள்ளன. புதிய கட்சியாக களமிறங்கிய தமிழக வெற்றி கழகம், நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று மாநிலத்தின் தனிப்பெரும் அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது.

இந்த தேர்தலின் மிகப்பெரிய அதிர்ச்சியாக, ஆளுங்கட்சியான திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

அதேபோல், அமைச்சரவையில் இருந்த பல முக்கிய தலைவர்களும் பின்னடைவை சந்தித்துள்ளனர். சைதாப்பேட்டை தொகுதியில் மா. சுப்பிரமணியன் தோல்வியடைந்த நிலையில், தவெக வேட்பாளர் அருள் பிரகாசம் வெற்றி பெற்றுள்ளார். ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவும் தோல்வியை சந்தித்துள்ளார்; அங்கு தவெக வேட்பாளர் சதீஷ் கிறிஸ்டோபர் வெற்றி பெற்றுள்ளார்.

மதுரை மத்திய தொகுதியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தோல்வியடைந்தது கவனத்தை ஈர்த்துள்ளது. தூத்துக்குடியில் கீதா ஜீவன், மன்னார்குடியில் டி.ஆர்.பி. ராஜா, திருவெறும்பூரில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலர் தோல்வியை சந்தித்துள்ளனர்.

இதற்கிடையில், திமுகவின் சில முக்கிய தலைவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். துறைமுகத்தில் சேகர்பாபு, திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு ஆகியோரும் வெற்றி பெற்று திமுகவுக்கு ஒரு அளவிற்கு ஆதரவாக இருந்துள்ளனர். மேலும், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், அமைச்சர் சிவசங்கர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரும் தங்கள் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த தேர்தலின் முக்கிய அம்சமாக, இளைஞர்கள் மற்றும் பெண்கள் வாக்குகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். புதிய அரசியல் மாற்றத்தை நோக்கி மக்கள் நகர்ந்துள்ளதற்கான தெளிவான சிக்னலாக இந்த முடிவுகள் பார்க்கப்படுகின்றன.

: எம்.ஜி.ஆர் சாதனையை முறியடித்த விஜய்.. 34.8% வாக்குகள் பெற்று சரித்திரம் படைத்த தவெக..!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: 1News Nation