Dailyhunt
சோழர் கால சிற்பங்கள் பேசும் தஞ்சை நீலமேகப் பெருமாள் கோவில்.. வியக்க வைக்கும் வரலாறு..!

சோழர் கால சிற்பங்கள் பேசும் தஞ்சை நீலமேகப் பெருமாள் கோவில்.. வியக்க வைக்கும் வரலாறு..!

1News Nation 6 months ago

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நீலமேகப் பெருமாள் கோயில், பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக சிறப்பிடம் பெற்றது. “தஞ்சை மாமணிக்கோயில்” எனவும் அழைக்கப்படும் இந்த ஆலயம், அதன் புராண வரலாறு மற்றும் சோழர் கால கலைக்கட்டிடங்களால் பிரபலமானது.

புராணக் கதையின்படி, தஞ்சை நகரை ஆட்சி செய்த அசுரன் தஞ்சகன் மக்களைத் துன்புறுத்தி வந்தான். அவர்களைக் காப்பதற்காக, விஷ்ணு அவனை வதம் செய்தார். மரண தருவாயில் தஞ்சகன், “இப்பகுதி என் பெயரில் அழைக்கப்படட்டும்” எனக் கோரியதால், அந்த இடம் 'தஞ்சாவூர்' எனப் பெயரிடப்பட்டது.

இந்த ஆலயத்தின் மூலவரான நீலமேகப் பெருமாள், தஞ்சகனை வதம் செய்ததால் “தஞ்சை மாமணி” என்று போற்றப்படுகிறார். அவருடன் செங்கமலவல்லி தாயார் திருவுருவழகுடன் காட்சி தருகிறார். இங்கு நீலமேகப் பெருமாள் சன்னதி, மணிக்குன்றப் பெருமாள் சன்னதி மற்றும் நரசிம்மப் பெருமாள் சன்னதி என மூன்று தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளன. இந்த மூன்று சன்னதிகளும் ஒரே திவ்யதேசமாக கருதப்படுவது, ஆலயத்தின் மற்றொரு சிறப்பு. மூலவர் கிழக்கு நோக்கி நின்று, நீலமேக வண்ணத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

வைகுண்ட ஏகாதசி, பிரம்மோற்சவம் போன்ற வைணவத் திருவிழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். ஆலயத்தின் சிற்பங்கள், மண்டபங்கள், கோபுரங்கள் ஆகியவை சோழர் கால கலைத்திறனை வெளிப்படுத்துகின்றன. தஞ்சை நீலமேகப் பெருமாள் கோயில், ஆன்மிகமும் கலையும் ஒன்றிணைந்த புனிதத் தலமாக, பக்தர்களின் மனதில் அமைதியும் ஆனந்தமும் விதைக்கிறது.

: வாஸ்துபடி அதிகாலையில் இந்த தவறுகளைச் செய்யாதீர்கள்.. உங்கள் நாள் முழுவதும் பாழாகிவிடும்..!!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: 1News Nation