கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 45 ஆயிரத்து 668 கன அடியாக அதிகரித்துள்ளது
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. அதனடிப்படையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
தென்பெண்ணை அணை விவகாரம்: தமிழக அரசை சாடிய உச்ச நீதிமன்றம் கபினி அணையில் இருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரத்து 668 கன அடி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.

