Dailyhunt
தவெக ஆட்சிக்கு ஆதரவு தொடரும்.. கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையூறாக இருக்காது..! - வீரபாண்டியன் உறுதி

தவெக ஆட்சிக்கு ஆதரவு தொடரும்.. கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையூறாக இருக்காது..! - வீரபாண்டியன் உறுதி

1News Nation 4 days ago

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை தவெக பெறாததால் அக்கட்சி ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவியது. பின்னர், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிகளின் ஆதரவோடு மே 10-ம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பொறுப்பேற்றார்.

இதற்கிடையில், ஆட்சிக்கு ஆதரவு வழங்கினாலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் ஆதரவை வாபஸ் பெறலாம் என்ற பேச்சுகள் எழுந்தனர். இந்த நிலையில் தவெக ஆட்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையூறு ஏற்படுத்தாது என வீரபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என மக்கள் முன்மொழிந்தார்களோ அந்தக் கட்சியை இடதுசாரிகள் வழிமொழிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் மீண்டும் தேர்தல், ஆளுநர் தலையீடு அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி போன்ற சூழல்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகவும், அரசில் அமைச்சர் பதவிகள் அல்லது பிற பொறுப்புகளை ஏற்கப்போவதில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். அதே நேரத்தில் அரசின் செயல்பாடுகளை கண்காணித்து, தேவையான இடங்களில் மக்கள் நலக் கோணத்தில் கருத்து தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஆட்சிக்கு ஆதரவு வழங்கினாலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் ஆதரவை வாபஸ் பெறலாம் என்ற பேச்சுகள் எழுந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த வீரபாண்டியன், இதுவரை எந்த அரசுக்கும் இடதுசாரிகள் இடையூறு செய்த வரலாறு இல்லை என்றும், தமிழகத்திலும் அதே நிலை தொடரும் என்றும் கூறினார்.

மேலும், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் முடிவு வரவேற்கத்தக்கது என தெரிவித்த அவர், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதேபோல், முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் மக்கள் மனதை புரிந்தவர்கள் இடம்பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

: வெளிநாடுகளுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்ய தடை.. மத்திய அரசு அறிவிப்பு..!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: 1News Nation