Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
திருப்பரங்குன்றம் கோயிலில் 87 பேர் மயக்கமா..? கோயில் நிர்வாகம் பரபரப்பு விளக்கம்..!

திருப்பரங்குன்றம் கோயிலில் 87 பேர் மயக்கமா..? கோயில் நிர்வாகம் பரபரப்பு விளக்கம்..!

1News Nation 3 weeks ago

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.. வைகாசி விசாகத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யத் திரண்டதால் கடுமையான கூட்ட நெரிசலும், அதனுடன் வெயிலின் தாக்கமும் சேர்ந்து இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் கோயிலில் 87 பேர் மயக்கமடைந்ததாகவும், மயக்கமடைந்த 87 பக்தர்களுக்கும் கோயிலின் தேவசேனா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவ முகாமில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தகவல் வெளியானது..

மயக்கமடைந்தவர்களில் இருவர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.. கோயிலில் இவ்வளவு பெரிய விசேஷ நாளின் போது கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்யவும் போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனச் சில பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் கோவில் வந்த பக்தர்கள் 87 பேர் மயக்கம் என தகவல் பரவிய நிலையில் கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஒரே ஒருவர் மட்டும் சர்க்கரை அளவு அதிகரித்ததன் காராணமாக மயக்கம் அடைந்ததாகவும் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.. விளாங்குடியை சேர்ந்த பார்த்தசாரம் என்பவர் சர்க்கரை அளவு அதிகரித்ததால் மயங்கினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரதம் இருந்த நிலையில் சர்க்கரை அளவு 456ஆக இருந்ததால் பார்த்தசாரதி மயங்கியதாக கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 87 பேர் மயக்கமடைந்தாக கூறப்படும் தகவல் பொய் என்றும் கோயில் நிர்வாகம் என்றும் தெரிவித்துள்ளது..

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: 1News Nation