Dailyhunt
TN Election Results 2026: பாஜக போட்டியிட்ட 27 சட்டமன்ற தொகுதிகளிலும் பின்னடைவு..!

TN Election Results 2026: பாஜக போட்டியிட்ட 27 சட்டமன்ற தொகுதிகளிலும் பின்னடைவு..!

1News Nation 6 days ago

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மொத்தம் 27 தொகுதிகளில் போட்டியிட்டது. கடந்த தேர்தலில் 4 எம்.எல்.ஏ.க்கள் வென்றிருந்த நிலையில், இந்த முறை இரட்டை இலக்க வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையை பாஜக வெளிப்படுத்தியிருந்தது. ஆனால் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில், அனைத்து தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் பின்தங்கியுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் தபால் வாக்குகள் மற்றும் ஆரம்ப EVM வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பல தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தவெக 99 இடங்களில் முன்னிலை பெற்று முதலிடத்தில் உள்ளது. அதிமுக 78 தொகுதிகளில் முன்னிலை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. திமுக 53 இடங்களில் முன்னிலை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. ஒட்டுமொத்தமாக பாஜக வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 31 அமைச்சர்கள் பின்னடைவு வகித்து வருகிறார்கள். ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் ஐ.பெரியசாமி, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் கே.ஆர்.பெரிய கருப்பன், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் மெய்ய நாதன் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் மட்டுமே முன்னிலையில் உள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: 1News Nation