Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வரலாற்றில் முதன்முறை! மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் இந்தியா!. எப்போது தொடக்கம்?

வரலாற்றில் முதன்முறை! மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் இந்தியா!. எப்போது தொடக்கம்?

1News Nation 3 days ago

முதலாவது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. 2027 பிப்ரவரி 14 முதல் 28 வரை நடைபெறவுள்ள இத்தொடரை மும்பை மற்றும் வதோதரா நகரங்கள் இணைந்து நடத்துகின்றன. மும்பையில் உள்ள ‘கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா’ (CCI) மற்றும் ‘வதோதரா சர்வதேச கிரிக்கெட் மைதானம்’ ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய 6 அணிகள் களமிறங்குகின்றன. 2026 ஜூலை 6 வரையிலான ஐசிசி டி20ஐ தரவரிசை அடிப்படையில் இந்த அணிகள் தகுதி பெற்றுள்ளன.

6 அணிகளும் ரவுண்ட்-ராபின் முறையில் மோதிக்கொள்ளும்; புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிப்ரவரி 28 அன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும்.

ஆரம்பத்தில் இத்தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் மற்றும் நிர்வாகக் காரணங்களால் இத்தொடர் இந்தியாவுக்கு மாற்றப்பட்டது. பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை விட இந்தியாவின் உள்கட்டமைப்பு சிறப்பாக இருந்ததால் ஐசிசி போர்டு இந்தியாவைத் தேர்வு செய்தது.

“மகளிர் கிரிக்கெட்டுக்கு இந்தத் தொடர் புதிய அத்தியாயமாக அமையும். ஆண்டுதோறும் முக்கிய ஐசிசி தொடர்களை நடத்துவது மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும்” என்று ஐசிசி தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

மேலும், போட்டிகளுக்கான முழு அட்டவணை மற்றும் டிக்கெட் விற்பனை குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: 1News Nation