Dailyhunt
விருத்தாச்சலத்தில் கை கொடுக்காத கேப்டன் சென்டிமென்ட்.. பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவு.. தவெக வேட்பாளர் முன்னிலை..!

விருத்தாச்சலத்தில் கை கொடுக்காத கேப்டன் சென்டிமென்ட்.. பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவு.. தவெக வேட்பாளர் முன்னிலை..!

1News Nation 2 weeks ago

2024 மக்களவை தேர்தலுக்கு பின் ராஜ்யசபா சீட் கிடைக்காத விரக்தியில், அதிமுக கூட்டணியில் இருந்து பிரேமலதா விஜயகாந்த் விலகினார். பின்னர் நீண்ட அரசியல் இழுபறிக்குப் பிறகு திமுக கூட்டணியில் இணைந்தது தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டணிக்குப் பின்னால் பல அரசியல் கணக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இளம் தலைமுறை வாக்குகளை கவரும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற புதிய கட்சிகளின் வருகையால் ஏற்படும் வாக்குச் சிதறலை கட்டுப்படுத்த திமுக இந்த நகர்வை செய்ததாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்தனர்.

அதேபோல், கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தொகுதி பங்கீட்டு அழுத்தத்தை சமாளிக்கவும் தேமுதிகவின் சேர்க்கை திமுகவுக்கு உதவியதாகவும் கூறப்படுகிறது. இதன் விளைவாகவே மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு குறைவான தொகுதிகள் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இந்த முடிவு கூட்டணிக்குள் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது. தேமுதிகவுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் குறித்து சில கூட்டணி கட்சிகள் கேள்வி எழுப்பியதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதற்கிடையே தேமுதிக மீண்டும் ஒரு வலுவான அரசியல் சக்தியாக மாறுமா அல்லது தொடர்ந்த சரிவை சந்திக்குமா என்பதே முக்கிய கேள்வியாக இருந்தது.

இந்த நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பிரேமலதா பின்னடைவை சந்தித்து வருகிறார். விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளரிடம் 15 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

: கடன் வாங்கியவர் இறந்துவிட்டால்..! அந்தக் கடன் தள்ளுபடி செய்யப்படுமா..? விதிகள் என்ன கூறுகின்றன?

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: 1News Nation