Tamil News >> 4tamil cinema >> upcomingmovies
Wednesday, 25 Jul, 8.42 am

அழகுமகன் - விரைவில்.திரையில்.

அவதார் மூவிஸ் மற்றும் தாருண் கிரியேசன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் 'அழகுமகன்'.

அர்ஜுன் உதய் கதாநாயகனாக அறிமுகமாக, மாளவிகா வேல்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் இளவரசு ராஜ்கபூர் ஜி.எம்.குமார்,சிங்கம்புலி,பவன் சேரன்ராஜ் செந்தி நித்திஸ் விசித்திரன் வைரவன் ஆகியோர் நடிக்கிறார்கள்

இப்படத்தை அழகன் செல்வா, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவர் இயக்குனர்கள் யார் கண்ணன், கரு.பழனியப்பன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். இவர் இயக்கும் முதல் படம் இது.

படம் பற்றி இயக்குனர் அழகன் செல்வா கூறியதாவது,

"இது ஒரு பக்கா கமர்ஷியல் படம். தென் மாவட்ட மக்களின் உணர்வுகளையும் உணர்ச்சியையும் பிரதி பலிக்கும் படம். அன்பை பிரதிபலிப்பதும் அராஜகத்தை எதிர்த்து வெகுண்டெழுவதும் அவர்களது இயல்பு. தென் மாவட்ட மண்ணின் மகிமையையும் அந்த மக்களின் கலாச்சாரத்தையும் இதில் காட்டி இருக்கிறோம்.

அர்ஜுன் உதய், அவரது நண்பர்கள் எதிர்கால சிந்தனை எதுவுமின்றி ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பவர்கள். நான்கு நண்பர்களும் நான்கு விதமான வாழ்க்கை சூழ்நிலையில் வாழ்பவர்கள். அர்ஜுன் உதய்க்கும் மாளவிகா வேல்ஸுக்கும் அழகான காதல் ஒரு பக்கம். இதற்கிடையே அர்ஜுன் உதய் ஒரு பிரச்சனையில் சிக்க, அதனால் அவரது வாழ்க்கையில் மிகப் பெரிய சிக்கல் ஏற்படுகிறது.

அவரக்கு மட்டுமல்லாமல் அவரது நண்பர்களுக்கும் எந்த மாதிரியான சிக்கல் ஏற்படுகிறது என்பதுதான் படத்தின் கதை. முழுக்க முழுக்க ஆகபஷன் படமாக உருவாகி இருக்கிறது," என்கிறார் இயக்குனர் அழகன் செல்வா.
படத்தின் படப்பிடிப்பு பெரியகுளம் தேனி போடி கேரளா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

படத்தைப் பார்த்த பிரபல விநியோகஸ்தர் ஸ்ரீ முருகன் சினி ஆர்ட்ஸ் செல்வம் தமிழகம் முழுவதும் இப்படத்தை ஆகஸ்ட் 3ம் தேதி வெளியிடுகிறார்.

ஒளிப்பதிவு - அகு அஜ்மல்
இசை - ஜேம்ஸ் வசந்தன்
பாடல்கள் - யுகபாரதி, தாமரை,மோகன்ராஜ்.
கலை - முருகன்
எடிட்டிங் - மகேஷ்.G.K
சண்டை பயிற்சி - பயர் கார்த்திக்
நடனம் - ராதிகா
மக்கள் தொடர்பு - மௌனம் ரவி
தயாரிப்பு - செல்வி ராஜேந்திரன், ஞானதேஸ் அம்பேத்கார்

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: 4tamil cinema