Dailyhunt
ரஜினி படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் - யார் ஜோடி ?

ரஜினி படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் - யார் ஜோடி ?

screen4screen 6 years ago

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்களின் அறிவிப்பு நேற்று முதல் வெளியானது.

நேற்று கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போவதாக அறிவித்தார்கள். அடுத்து பிரகாஷ் ராஜ் நடிக்கப் போவதாகவும் அறிவித்தார்கள்.

இன்று மீனா, குஷ்பு ஆகியோர் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

1995ம் ஆண்டு வெளிவந்த 'முத்து' படத்திற்குப் பிறகு 24 வருடங்கள் கழித்து ரஜினிகாந்த், மீனா மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார்கள். அது போல, 1992ம் ஆண்டுவெளிவந்த 'பாண்டியன்' படத்திற்குப் பிறகு 27 வருடங்கள் கழித்து ரஜினிகாந்த்துடன் குஷ்பு நடிக்க உள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா நடிகை மேனகா, 1981ல் ரஜினிகாந்த் ஜோடியாக 'நெற்றிக்கண்' படத்தில் நடித்துள்ளார்.

பிரகாஷ்ராஜ் 1999ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'படையப்பா' படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். ஒரு முழுமையான கதாபாத்திரத்தில் ரஜினியுடன் அவர் நடித்ததில்லை.

இப்படி பெரிய இடைவெளிக்குப் பிறகு சிலர் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க உள்ளார்கள். கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் இமான், இயக்குனர் சிவா முதல் முறையாக ரஜினியுடன் பணிபுரிய உள்ளார்கள்.

படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு என மூன்று முக்கிய நடிகைகள் இருப்பதால் இவர்களில் யார் ரஜினி ஜோடியாக நடிக்கப் போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

ரஜினிகாந்த் 168 படத்தில் நடிப்பது பற்றி கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு கூறியிருக்கும் வீடியோக்கள்.

#KeerthyInThalaivar168 @rajinikanth @KeerthyOfficial @directorsiva #Thalaivar168 pic.twitter.com/tNPBSxVEB8

- Sun Pictures (@sunpictures)

#Meena about joining #Thalaivar168 @rajinikanth @directorsiva pic.twitter.com/oiW1ORqKv9

- Sun Pictures (@sunpictures)

#Khushbu about joining #Thalaivar168 @rajinikanth @directorsiva pic.twitter.com/KIxVyZWOvX

- Sun Pictures (@sunpictures)

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: screen4screen