உலகம் முழுவதும் ஜூன் 21ம் தேதியான இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் உங்களது தந்தைக்கு இந்த வாழ்த்து செய்திகளை அனுப்பி அன்பை பகிருங்கள்.
2026 தந்தையர் தினம் வரலாறு
தந்தையர் தினம் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமெரிக்காவில் தான் தொடங்கியது. அங்கு வசித்து வந்த ஒரு நபர் தனது மனைவி இறந்த பிறகு 6 குழந்தைகளையும் தனி ஆளாக வளர்த்தார். அவர்களில் ஒருவரான சோனாரா ஸ்மார்ட் டாட் ஒரு போர் வீரராவார். அவர் 6 குழந்தைகளை தனியாளாக வளர்த்த தன்னுடைய தந்தையை கௌரவிக்க விரும்பினர்.
அன்னையர் தினம் போல தந்தையர்களையும் குடும்ப வாழ்க்கைக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்புகளையும் அங்கீகரிப்பதற்காக ஒரு தினத்தை உருவாக்க விரும்பினார். அப்படித்தான் தந்தையர் தினம் உருவானது. பின்னாளில் தந்தையரின் நன்றி, அன்பு மற்றும் பாராட்டை வெளிப்படுத்தும் ஒரு வருடாந்திர நிகழ்வாக இது மாறியது.
தந்தையர் தினம் என்பது ஒருநாள் கொண்டாட்டம் இல்லை. நம்முடைய ஒவ்வொரு அசைவிலும் அப்பாவின் எண்ணம், உணர்வு உள்ளது. வாழ்க்கையில் நாம் முன்னேறுவது தொடங்கி, நம்முடைய வளர்ச்சியை கட்டமைப்பதில் ஒவ்வொரு செங்கலாக எடுத்து வைப்பது வரை எல்லாமே அப்பாவின் செயல்களாக இருக்கும்.
தந்தையர் தின வாழ்த்துகள்
- எனக்கு வழிகாட்டும் உறுதியான கரமாகவும், என்னை ஊக்குவிக்கும் குரலாகவும், என் மீது எப்போதும் நம்பிக்கை வைக்கும் இதயமாகவும் இருப்பதற்கு நன்றி. இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் 2026 அப்பா!
- உங்கள் அன்புதான் எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது அப்பா, என் வாழ்நாள் முழுவதும் எனக்கு வழிகாட்டியாக இருந்து அதனை மகிழ்ச்சியாக மாற்ற வேண்டும்!
- சொற்களை விட செயல்களே மேலானவை என்று எனக்குக் கற்றுக்கொடுத்த அப்பா நீங்கள் தான் எனக்கு முன்மாதிரி. இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!
- அப்பா, நீங்கள் என் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆதரவாளராகவும், கண்டிப்பான ஆசிரியராகவும், வலிமையான பாதுகாவலராகவும் இருப்பதற்கு இந்த தந்தையர் தினத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கான அனைத்து மகிழ்ச்சிகளும் உங்களுக்குக் கிடைக்க வாழ்த்துகிறேன்.
- என் கனவுகளை நம்பி, என்னை எப்போதும் உற்சாகப்படுத்திய முதல் நபருக்கு—இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள். நீங்கள் தான் என் உலகம் அப்பா!
- தந்தையின் அன்பு சூரியனைப் போன்றது; அது தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், எப்போதும் ஒளியைத் தரும். இனிய தந்தையர் தின வாழ்த்துகள்.
Kayadu Lohar: சமூக வலைத்தளங்களில் இருந்து கயாடு லோஹர் விலகல்.. இதுதான் காரணமா? - ரசிகர்கள் சோகம்!
- அப்பா, நீங்கள்தான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய பலமும் உத்வேகமும். நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்க வேண்டும்.
- அப்பா, உங்கள் கண்டிப்பில் அன்பும், உங்கள் மௌனத்தில் அக்கறையும் இருந்தது. இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்.
- நமது கனவுகளை நிறைவேற்றுவதற்காக உங்கள் சொந்த ஆசைகளைத் தியாகம் செய்தீர்கள், உங்கள் அன்பை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!
Author : பேச்சி ஆவுடையப்பன்

