Dailyhunt
24 ஆண்டு சினிமா வாழ்க்கைக்கு குட்பை சொல்லும்  த்ரிஷா..தகவல் உறுதிபடுத்திய சித்ரா லட்சுமணன்

24 ஆண்டு சினிமா வாழ்க்கைக்கு குட்பை சொல்லும் த்ரிஷா..தகவல் உறுதிபடுத்திய சித்ரா லட்சுமணன்

ABP Nadu 3 weeks ago

மிழ் சினிமாவில் கடந்த 24 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. த்ரிஷா விரைவில் சினிமாவில் இருந்து விலக இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதுகுறித்து ஊடகவியாலாளர் சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் சேனலில் பேசியபோது தகவலை உறுதிபடுத்தியுள்ளார்.

அமீர் இயக்கிய மெளன் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. தமிழ் , தெலுங்கு , இந்தி , மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளில் 65 படங்கள் வரை நடித்துள்ளார். ரஜினி , கமல் , விஜய் , அஜித் , விக்ரம் , சூர்யா , தனுஷ் , சிம்பு என தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் த்ரிஷா. சமீப காலங்களில் த்ரிஷாவின் பெயர் தவெக தலைவர் விஜயுடன் தொடர்புபடுத்தி பல்வேறு சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. இப்படியான நிலையில் ரசிகர்களுக்கு மற்றுமொரு ஷாக் தகவல் வந்து சேர்ந்துள்ளது.

சினிமாவில் இருந்து விலகும் த்ரிஷா

த்ரிஷா சினிமாவில் இருந்து விலக இருப்பதாக அண்மை காலங்களில் அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது மூத்த ஊடகவியலாளரான சித்ரா லட்சுமணன் த்ரிஷா சினிமாவில் இருந்து விலகுவதாக வெளியான தகவல் உண்மையென உறுதிபடுத்தியுள்ளார். த்ரிஷா சினிமாவில் இருந்து விலகுகிறாரா என்கிற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன் " த்ரிஷா கூடிய விரைவில் சினிமாவில் இருந்து விலகுவதாக வெளியாகியுள்ள தகவல் உண்மை தான். எனக்கு தெரிந்த சில தயாரிப்பாளர்களிடம் நேரடியாக பேசியபோது த்ரிஷா புதிய படங்களில் கமிட் ஆவதை முழுமையாக நிறுத்திவிட்டார்" என்று கூறியுள்ளார். இதனால் த்ரிஷா ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

த்ரிஷா தனது பழைய நேர்காணல் ஒன்றில் தனக்கு முதலமைச்சார வேண்டும் என்கிற ஆசை இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது சினிமாவில் இருந்து அவர் விலக முடிவெடுத்துள்ள நிலையில் விஜயைப் போலவே அவருடம் அரசியலுக்கு வருவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது ?

Author : ராகேஷ் தாரா

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu