40 லிட்டர் நெய் திருடிய சேலம் ஆவின் துணை பொதுமேலாளர் சஸ்பெண்ட்.
சேலம் ஆவின் நிறுவனத்தில் நெய் திருடியதாக துணை பொதுமேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
சேலம் ஆவின் நிறுவனத்தில் துணைப் பொதுமேலாளராக சாரதா பணிபுரிகிறார். இவர் கடந்த சில மாதங்களாக ஆவின் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் நெய், வெண்ணெய் டப்பாக்களை, சில அலுவலர்களின் துணையோடு மறைத்து வைத்து வெளிசந்தையில் விற்பனை செய்து வருவதாக புகார்கள் வந்தன. இவர் கையும் களவுமாக பிடிபட்டும், உயர் அதிகாரிகள் துணையோடு அவற்றில் இருந்து தப்பித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தொடர்ந்து அவர் மீது பல்வேறு புகார்கள் வந்ததன் அடிப்படையில் துணை பொதுமேலாளர் சாரதாவின் அறையில் சில தினங்களுக்கு முன்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அவருடைய மேஜையின் டிராயரில் 40 லிட்டர் நெய் டப்பாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் உயர் அதிகாரிகளின் உதவியோடு அவர் வழக்கம் போல தப்பித்தார். இதனிடையே, அவரது அறையில் இருந்து நெய் பாட்டில்கள் எடுப்பது தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
அதன் அடிப்படையில், சேலம் ஆவினில் பணியாற்றி வந்த துணை பொதுமேலாளர் சாரதாவை சஸ்பெண்ட் செய்து பால்வளத்துறை நிர்வாக இயக்குனர் அஜய் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
Author : ராஜேஷ். எஸ்

