Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!

8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!

ABP Nadu 1 week ago

டலூர்: நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் (VKT) தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் முக்கியப் பகுதியான வடலூர் பை- சாலைப் பணிகள் தற்போது மீண்டும் விறுவிறுப்படைந்து, தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

8 ஆண்டுகளாக நீடிக்கும் சாலை விரிவாக்கப் பணி

சென்னையிலிருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி, வடலூர், சேத்தியாத்தோப்பு, கும்பகோணம் வழியாகத் தஞ்சாவூர் வரையிலான போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் 'வி.கே.டி தேசிய நெடுஞ்சாலை' விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டன.

இருப்பினும், கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தடைகளால் இத்திட்டம் தாமதமாகி வந்தது:

கொரோனா பெருந்தொற்று பரவல், ஒப்பந்ததாரர்களின் பணி இடர்பாடுகள் மற்றும் குளறுபடிகள், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதங்கள் ஏற்பட்டது.

முடங்கிய பணிகள் மீண்டும் வேகம் எடுத்தன

வடலூர் நகருக்குள் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக 'வடலூர் பை- சாலை' அமைக்கும் பணிகள் முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே அப்பணிகள் எவ்வித முன்னேற்றமும் இன்றி முடங்கிக் கிடந்தன. சில மாதங்களுக்கு முன்பு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்ட போதிலும், இடையில் சிறிது காலம் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது அனைத்துத் தடைகளும் நீக்கப்பட்டு, ஆண்டிக்குப்பம் பகுதியில் வடலூர் பை- ரயில்வே மேம்பாலம் மற்றும் நெடுஞ்சாலை மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ராட்சத கிரேன்கள் மூலம் பாலப் பணிகள்

கடலூர் - சேலம் நெடுஞ்சாலை சந்திப்புப் பகுதியில், ராட்சத கிரேன்கள் (Giant Cranes) வரவழைக்கப்பட்டு மேம்பாலத் தூண்கள் மற்றும் விட்டங்கள் அமைக்கும் பணிகள் இரவு பகலாக வேகமெடுத்து வருகின்றன. இப் பணிகள் நிறைவடையும் பட்சத்தில் வடலூர் பகுதி சந்திக்கும் போக்குவரத்து நெரிசலுக்குப் பெரிய தீர்வு கிடைக்கும்.

முழுமை பெறப்போகும் வி.கே.டி நெடுஞ்சாலை

வடலூர் பை- பணிகள் முடிவடைந்து, விக்கிரவாண்டி வரையிலான எஞ்சியுள்ள ஒருசில பகுதிப் பணிகளும் நிறைவு பெற்றால், ஒட்டுமொத்த வி.கே.டி நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டமும் முழுமையாக முற்றுப்பெறும். எனவே, எஞ்சியுள்ள பணிகளையும் எவ்விதத் தொய்வுமின்றி விரைந்து முடித்துச் சாலையைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்குச் சமூக ஆர்வலர்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Author : சிவரஞ்சித்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu