Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆட்சிக்கு வந்தவுடன் எல்லாத்தையும் மாத்த முடியாது.. தவெகவுக்கு துரை வைகோ ஆதரவு!

ஆட்சிக்கு வந்தவுடன் எல்லாத்தையும் மாத்த முடியாது.. தவெகவுக்கு துரை வைகோ ஆதரவு!

ABP Nadu 4 months ago

தவெக அரசு எடுத்தவுடன் எல்லாம் செய்ய வேண்டும் என நினைப்பது நடைமுறையில் சாத்தியமே இல்லை என துரை வைகோ எம்.பி., தெரிவித்துள்ளார்.

ஒரு வருடம் கால அவகாசம் கொடுக்கணும்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த நிலையில், “தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் செயல்பாடு குறித்து துரை வைகோவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “இந்த புதிய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு பேச்சு சென்றுக் கொண்டிருக்கிறது. அதாவது, ஒவ்வொரு நாளும் குற்றங்கள் நடப்பதாக விமர்சனம் செய்கிறார்கள். நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் மதிமுக நிலைப்பாடு என்னவென்றால் எந்தவொரு புதிய ஆட்சி வந்தாலும் குறைந்தது 6 மாதம் முதல் ஒரு வருடமாவது கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

சென்ற ஆட்சியில் பணியாற்றிய அதிகாரிகள் இடமாற்றம் என்பது இப்போது தான் நடந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் இருக்கும்போது குற்ற சம்பவங்கள் நடந்தது பற்றி கேள்வியெழுப்பியுள்ளீர்கள். எப்போதும் குற்ற சம்பவங்களை தடுக்க முடியாது. ஆனால் படிப்படியாக குறைக்க முடியும். அதை செய்பவர்கள் மீது நடவடிக்கை இந்த தவெக ஆட்சியும் எடுக்கிறார்கள். வடமாநிலங்களை ஒப்பிடும்போது அங்கு எவ்வளவு குற்றங்கள் நடைபெறுகிறது என்பதை நாம் புரிந்துக் கொள்ளலாம்.

நான் முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை ஒன்றை வைக்கிறேன். உங்களுக்கு ஒரு வருட கால அவகாசம் கொடுத்தாலும் சரி குற்றங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சரியான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

காவி உடை.. வள்ளுவரை கலங்கப்படுத்தாதீங்க.. ஆளுநருக்கு அமைச்சர் அருண்ராஜ் கடும் கண்டனம்!

சினிமாவில் தான் அப்படி நடக்கும்

வளர்ந்த நாடுகளில் கூட குற்ற சம்பவங்களை முழுவதுமாக தடுக்க முடியாது. ஆனால் தவெக அரசு எடுத்தவுடன் எல்லாம் செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள். சினிமாவில் தான் அதைப் பார்க்க முடியாது. நடைமுறையில் அது சாத்தியமில்லை. தவெக ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. ஒவ்வொரு துறையில் மாற்றம் கொண்டு வர நேரம் தேவை. தேர்தல் நேரத்தில் ஆட்சிக்கு வந்ததும் மாற்றம் வரும் என சொல்லலாம். ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை. அதற்கு நேரம் எடுக்கும்.

24 மணி நேரத்தில் மாற்றத்தை கொண்டு வர சினிமாவில் மட்டும் தான் முடியும். இந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் மறுதேர்தல் அல்லது, குடியரசுத்தலைவர் ஆட்சியோ வைக்கும் சூழல் வரும். அதை தடுக்கவே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள்,விசிக ஆகியவை தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது. அதுவும் நிபந்தனையுடன் தான் ஆதரவு கொடுத்தது” என துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Author : பேச்சி ஆவுடையப்பன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu