ராமேஸ்வரம்: இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள புனித தலமான இராமேஸ்வரத்தில் தனது புதிய ஹோட்டல் தொடங்கப்பட்டிருப்பதை 'கிராண்டு கான்டினென்ட் ஹோட்டல்ஸ் லிமிடெட்' மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
ஆன்மீகச் சுற்றுலா பிரிவில் தனது தடத்தை வலுப்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.
மிக முக்கியமான புனித யாத்திரை தலங்களில் ஒன்றான ராமேஸ்வரத்தில் நிறுவப்பட்டுள்ள இது, இந்நிறுவனத்தின் 31-வது ஹோட்டலாகும். பாம்பன் தீவில் அமைந்துள்ள இந்த நவீன 4-நட்சத்திர சைவ (வெஜிடேரியன்) ஹோட்டல், இந்தியா முழுவதும் அதிக தேவையுள்ள ஆன்மீக மற்றும் பொழுதுபோக்கு சுற்றுலா சந்தைகளில் தங்களது இருப்பை விரிவுபடுத்துவதில் இந்நிறுவனத்தின் தொடர்ச்சியான கவனத்தை பிரதிபலிக்கிறது.
முக்கிய வர்த்தக நகரங்களைத் தவிர, ஆண்டு முழுவதும் புனித யாத்திரைக்காக மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் இடங்களில் இந்நிறுவனம் சிறப்பு கவனத்துடன் ஹோட்டல்களை அமைப்பதை இராமேஸ்வரத்தில் புதிய ஹோட்டலின் தொடக்கம் காட்டுகிறது. உள்நாட்டுப் பயணிகள், குடும்பங்கள் மற்றும் ஆன்மீக ஆர்வலர்களை அதிக அளவில் ஈர்க்கும் கோவில் நகரமான ராமேஸ்வரத்தில், முக்கிய இடங்களுக்கு அருகாமையில், வசதியான மற்றும் சுகாதாரமான தங்கும் அனுபவத்தை அவர்களுக்கு வழங்கும் நோக்கத்தோடு இந்த ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராண்ட் கான்டினென்ட் ஹோட்டல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ரமேஷ் சிவா கூறுகையில், “எங்களது 31-வது ஹோட்டலாக ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய கிளை, எமது வெற்றிகரமான வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் புனிதப் பயணம் மேற்கொள்ளும் அமைவிடங்கள் மீது நாங்கள் செலுத்தி வரும் சிறப்பு கவனத்தை இந்த கிளையின் தொடக்கம் பிரதிபலிக்கிறது. தென்னிந்தியா தொடர்ந்து எங்களுக்கு ஒரு வலுவான வளர்ச்சிச் சந்தையாக இருந்து வருகிறது. பாதுகாப்பான, வசதியான மற்றும் சரியான இடத்தில் தங்குமிடத்தையே பயணிகள் விரும்பி தேடுகின்றனர்.
ராமேஸ்வரம் போன்ற பக்தி சுற்றுலா நகரங்களில் இத்தகைய தங்குமிட வசதிகளுக்கு தொடர்ந்து தேவை அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம். இனி வரும் காலங்களில், சோம்நாத், வாரணாசி மற்றும் அயோத்தியில் புதிய ஹோட்டல்களை நாங்கள் தொடங்கவிருக்கிறோம். அடுத்த சில ஆண்டுகளில், விருந்தோம்பல் பிரிவில் மொத்தத்தில் 3,000 அறைகள் கொண்ட பெருநிறுவனமாக வளர்ச்சியடைவது என்ற நிர்ணயிக்கப்பட்ட இலக்குடன் நாங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். அதே வேளையில், சிறப்பான செயல்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தங்குமிட அனுபவத்தை வழங்குவது மீதும் எமது தொடர்ச்சியான கவனமும், அர்ப்பணிப்பும் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கிராண்ட் கான்டினென்ட் ஹோட்டல்ஸ் நிறுவனம், இந்நாட்டில் 17-க்கும் மேற்பட்ட நகரங்களில் 31 ஹோட்டல்களை நிறுவி, 1,850-க்கும் மேற்பட்ட அறைகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில், இராமேஸ்வரத்தில் இந்த புதிய ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது. ஆன்மீகத் தலங்கள் மற்றும் வேகமாக வளர்ச்சி கண்டு வரும் பொழுதுபோக்கு சுற்றுலாத் தலங்களில், பயணிகள் தங்குவதற்கு தொடர்ச்சியான தேவை அதிகரித்து வருவதை இந்நிறுவனம் அடையாளம் கண்டிருக்கிறது. அனைத்து வசதிகளுடனும், சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வரும் விருந்தோம்பல் துறையின் வளர்ச்சியை இந்த தேவை ஊக்குவிக்கிறது.
தென்னிந்தியாவில் வலுவான அடித்தளத்துடனும், வட இந்தியாவிலும், துபாய் மற்றும் அமெரிக்கா போன்ற சர்வதேச சந்தைகளிலும் கிளைகளைக் கொண்டு இயங்கி வரும் நிலையில், நிலைப்புத்தன்மையுள்ள மற்றும் சிறப்பான தங்குமிட வசதிகளை உருவாக்கி பயணிகளுக்கு வழங்குவதில் இந்நிறுவனம் சிறப்பு கவனம் செலுத்துகிறது. புனித யாத்திரை தலங்கள், வர்த்தக மையங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் உள்ளிட்ட அதிக தேவையுள்ள சந்தைகளுக்கு விரிவாக்கத் திட்டங்களில் தொடர்ந்து முன்னுரிமை அளிக்க இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
ராமேஸ்வரம் ஹோட்டலில் 48 அதிநவீன அறைகள் உள்ளன. இதில் கிராண்டு சூட் அறைகள், பால்கனியுடன் கூடிய பிரீமியம் அறைகள், குடும்பத்தினர் தங்குவதற்கான பெரிய அறைகள் மற்றும் டீலக்ஸ் அறைகள் என பல பிரிவுகள் உள்ளன. அதிவேக வைஃபை, ஸ்மார்ட் டிவி, தேநீர் மற்றும் காபி மேக்கர், எலக்ட்ரானிக் பாதுகாப்பு பெட்டகம் மற்றும் 24 மணிநேர சூடான நீர் வசதி போன்ற அத்தியாவசிய வசதிகளுடன் நவீன முறையில் இந்த அறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கு சக்கர நாற்காலியும், சாய்தள வசதியும் உள்ளன.
இந்த ஹோட்டலில் 'பிளேவர்ஸ்' என்ற 48 இருக்கைகள் கொண்ட பல வகையான உணவுகளை வழங்கும் தூய சைவ உணவகம் உள்ளது. இங்கு ஆன்மீகப் பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஜெயின் மற்றும் சாத்வீக உணவுகளும் சுவையாகவும், தரமாகவும் தயாரித்து வழங்கப்படுகின்றன. மேலும் குழந்தைகளுக்கான பிரத்யேக விளையாட்டு இடமும் இந்த ஹோட்டல் வளாகத்தில் உள்ளது. ராமநாதசுவாமி கோயில் (1.9 கி.மீ), ராமேஸ்வரம் ரயில் நிலையம் (நடந்து செல்லும் தொலைவு), அக்னி தீர்த்தம் (2.9 கி.மீ) மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தேசிய நினைவிடம் (5 கி.மீ) போன்ற முக்கிய இடங்களுக்கு எளிதில் செல்லக்கூடிய அமைவிடத்தில் இந்த ஹோட்டல் இருப்பது இதன் சிறப்பை மேலும் உயர்த்துகிறது.
ஆன்மீக மற்றும் பொழுதுபோக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியான தங்குமிடம் மற்றும் சுவையான உணவகத்திற்கு மிகச்சிறந்த தேர்வாக இது இருக்கும். விருந்தோம்பல் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ரமேஷ் சிவா 2011-ல் நிறுவப்பட்ட 'கிராண்ட் கான்டினென்ட் ஹோட்டல்ஸ் லிமிடெட்', பெங்களூரில் 54 அறைகளுடன் தொடங்கப்பட்டு இன்று 1,850-க்கும் மேற்பட்ட அறைகளுடன் 31 ஹோட்டல்கள் என்ற மிகப்பெரிய வலையமைப்பாக வளர்ந்துள்ளது.
Author : என்.நாகராஜன்

