Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆப்பிள் பிரியர்களுக்கு செம நியூஸ்! ரூ.54,000-க்குள் விற்பனையாகும் ஐபோன் 17! எப்படி தெரியுமா?

ஆப்பிள் பிரியர்களுக்கு செம நியூஸ்! ரூ.54,000-க்குள் விற்பனையாகும் ஐபோன் 17! எப்படி தெரியுமா?

ABP Nadu 1 week ago

Get iPhone 17 For Under Rs 54,000: பிரபல ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 மாடலுக்குக் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் பிரத்யேக சலுகையை அறிவித்துள்ளது.

இதன் மூலம் தகுதியான வங்கி அட்டைகள் மற்றும் பழைய போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்யும் பயனர்கள் ஐபோன் 17 சாதனத்தை ரூ.54,000-க்கும் குறைவான விலையில் வாங்க முடியும். தொழில்நுட்ப பிரியர்களை வெகுவாகக் கவர்ந்துள்ள இந்தத் தள்ளுபடி ஆஃபர் பற்றிய விரிவான தகவல்களைப் கீழே காணலாம்.

விலை குறைப்பு மற்றும் வங்கிச் சலுகைகள் - iPhone 17 price drop India

பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 17 (256GB) மாடலின் அசல் விலையான ரூ.82,900-ல் இருந்து குறைக்கப்பட்டு, ரூ.80,900 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன், பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் (Flipkart Axis Bank) அல்லது பிளிப்கார்ட் எஸ்பிஐ (Flipkart SBI) கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.4,833 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த வங்கியின் சலுகையைப் பயன்படுத்திய பிறகு போனின் விலை ரூ.78,067 ஆகக் குறைகிறது.

எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் ரூ.54,000-க்கு கீழ் வாங்கும் வாய்ப்பு - iPhone 17 exchange discount Flipkart

இந்தச் சலுகையில் அதிக அளவிலான சேமிப்பைப் பெற விரும்பும் பயனர்கள் எக்ஸ்சேஞ்ச் வசதியைப் பயன்படுத்தலாம். பிளிப்கார்ட் இந்த போனுக்கு அதிகபட்சமாக ரூ.54,400 வரை எக்ஸ்சேஞ்ச் மதிப்பு வழங்குகிறது. உதாரணமாக, சிறந்த நிலையில் இருக்கும் 128GB சேமிப்பகம் கொண்ட ஐபோன் 13 மாடலை எக்ஸ்சேஞ்ச் செய்யும் போது தோராயமாக ரூ.22,250 வரை தள்ளுபடி கிடைக்கிறது. வங்கியின் ஆஃபர் மற்றும் இந்த எக்ஸ்சேஞ்ச் மதிப்பைக் கழித்த பிறகு, ஐபோன் 17-ன் இறுதி விலையானது ரூ.53,817 என்ற மிகக் குறைந்த விலைக்கு வந்துவிடும்.

ஐபோன் 17-ன் சிறப்பம்சங்கள் மற்றும் செயல்திறன் - iPhone 17 Specifications

புதிய தலைமுறை ஐபோன் 17 மாடலானது ஆப்பிள் நிறுவனத்தின் சக்திவாய்ந்த A19 சிப்செட்டைக் கொண்டு இயங்குகிறது. இதில் 6-கோர் சிபியு, 5-கோர் ஜிபியு மற்றும் 16-கோர் நியூரல் என்ஜின் ஆகியவை அடங்கியுள்ளன. இதனால் அன்றாடப் பயன்பாடுகள், உயர்தர கேமிங் மற்றும் ஆப்பிள் இன்டலிஜென்ஸ் அம்சங்கள் அனைத்தும் மிகவும் வேகமாகவும் தடங்கலின்றியும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 120Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்ட (ProMotion) 6.3 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்.டி.ஆர் ஓஎல்இடி (Super Retina XDR OLED) திரை வழங்கப்பட்டுள்ளது.

கேமரா மற்றும் பேட்டரி திறன்

புகைப்படப் பிரியர்களுக்காக இதில் 48 மெகாபிக்சல் மெயின் கேமரா மற்றும் 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா அடங்கிய 48MP டூயல் ஃபியூஷன் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது ஆப்டிகல் தரம் கொண்ட 2x ஜூம் வசதியையும் ஆதரிக்கிறது. முன்பக்கத்தில் சிறப்பான செல்பிக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 18 மெகாபிக்சல் 'சென்டர் ஸ்டேஜ்' கேமரா அமைக்கப்பட்டுள்ளது. பேட்டரியைப் பொறுத்தவரை, 30 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக் வழங்கும் ஆற்றல் கொண்டது. அத்துடன் 40W அல்லது அதற்கு மேற்பட்ட சார்ஜரைப் பயன்படுத்தும் போது வெறும் 20 நிமிடங்களில் 50 சதவீதம் வரை விரைவாகச் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

Author : கிஷோர்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu