Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Ajithkumar:  நடிகர் அஜித்தின் தாயார் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்.. ரசிகர்கள் சோகம்!

Ajithkumar: நடிகர் அஜித்தின் தாயார் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்.. ரசிகர்கள் சோகம்!

ABP Nadu 2 months ago

மிழ் சினிமாவின் முன்னனி நடிகரான அஜித்குமாரின் தாயார் மோகினி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார்.

அவரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித். இவருக்கு அனுப் குமார், அனில்குமார் என இரு சகோதரர்கள் உள்ளனர். இந்த சூழலில் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி அஜித்தின் தந்தை பி.சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார். இந்த சூழலில் அஜித்தின் தாயார் மோகினி இன்று உடல்நலக்குறைவால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித்தின் இல்லத்தில் அவரது தாயாரின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அஜித் தற்போது துபாயில் இருப்பதால் அவர் உடனடியாக சென்னை திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வயது மூப்பு காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவும் தனது 84 வயது மோகினி உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. அவரது மறைவு செய்தி அறிந்தவுடன் ரசிகர்கள் பலரும் அஜித்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் பதிவில், “அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார் மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை. அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்” என தெரிவித்துள்ளார்.

அஜித் தரப்பில் வெளியான அறிக்கை

இதனிடையே அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட அறிக்கையில், “எங்களின் அன்புத் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் இன்று தனது 85வது வயதில் அமைதியாக காலமானார் என்பதை மிகுந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவர் எங்கள் குடும்பத்தின் இதயமாக விளங்கியவர். எல்லையற்ற அன்பு, அமைதியான மனவலிமை, ஞானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் உருவமாக இருந்தார். அவரது இருப்பும் அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த வாழ்க்கை மதிப்புகளும் எங்கள் வாழ்வை வடிவமைத்தவை. அவை என்றும் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.

அவரது பிரிவு ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவருடன் பகிர்ந்து கொண்ட எண்ணற்ற இனிய நினைவுகள், அவர் எங்கள்மீது பொழிந்த அளவற்ற பாசம் மற்றும் அவரது அன்பாலும் கருணையாலும் அவர் தொட்டுச் சென்ற பலரின் வாழ்வுகள் எங்களுக்கு ஆறுதலாக உள்ளன.

இந்த கடினமான நேரத்தில் தங்களது பிரார்த்தனைகள், இரங்கல் செய்திகள் மற்றும் ஆறுதல் வார்த்தைகள் மூலம் எங்களுடன் நிற்கும் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் அன்பும் ஆதரவும் எங்கள் குடும்பத்திற்கு பெரும் ஆறுதலாக இருக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author : பேச்சி ஆவுடையப்பன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu