Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அம்மாவின் கள்ளக் காதலனால் நேர்ந்த கொடூரம் !! பள்ளி மாணவி கர்ப்பம் !! வெளிவந்த அதிர்ச்சி உண்மை

அம்மாவின் கள்ளக் காதலனால் நேர்ந்த கொடூரம் !! பள்ளி மாணவி கர்ப்பம் !! வெளிவந்த அதிர்ச்சி உண்மை

ABP Nadu 2 weeks ago

வேறு ஆணுடன் தொடர்பில் இருந்த மனைவி

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்க குமார்.

இவருக்கும் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த முது செல்வி என்பவருக்கும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு முத்து செல்வி வேறு ஒரு ஆணுடன் தொடர்பில் இருந்ததாக சொல்லப்படும் நிலையில், இதன் காரணமாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு கணவனை பிரிந்து முத்து செல்வி தனது குழந்தைகளுடன் விளாத்திகுளம் அருகே மாமுனியபுரத்தில் தனியாக வசித்து வருகிறார்.

திருமணம் மீறிய உறவு

இதற்கிடையில் தனியாக வசித்து வந்த முத்து செல்விக்கும் அதே பகுதியை சேர்ந்த முது முருகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருக்கமாக பழகி வந்திருக்கின்றனர். பின்னர் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி 5 வருடங்களாக கள்ளத் தொடர்பில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

முத்து செல்வியின் மகள் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள அரசு பள்ளியில் 8 - ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம் போல, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற சிறுமி வகுப்பறையில் மயக்கமடைந்த நிலையில் அவரை மீட்ட ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த போது அவர் கருக்கலைப்பு மாத்திரையை உட்கொண்டதால் இவ்வாறு நடத்தும், சிறுமி கர்ப்பமாக இருந்ததும் தெரிய வந்தது

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் - கர்பமாகிய சிறுமி

இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் இது குறித்து சிறுமியின் தந்தைக்கு தெரிவித்த நிலையில் மருத்துவமனைக்கு சென்ற தங்க குமார், மகளிடம் விசாரித்த போது தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது கள்ளக் காதலன் முத்து முருகன் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்து மீறி நடந்து கொண்டது தெரிய வந்தது.

எனவே சிறுமியின் தந்தை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முத்து முருகன் மீது புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Author : சேர்மசாமி

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu