Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அரசன் படப்பிடிப்பு தாமதத்திற்கு சிம்பு காரணமா ?  தயாரிப்பாளர் தானு விளக்கம்

அரசன் படப்பிடிப்பு தாமதத்திற்கு சிம்பு காரணமா ? தயாரிப்பாளர் தானு விளக்கம்

ABP Nadu 2 months ago

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அரசன் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசன் படப்பிடிப்பிற்கு சிம்பு நேரத்தில் வருவதில்லை இதனால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்படுவதாக அடிக்கடி சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வந்தன. இது குறித்து அரசன் படத்தின் தயாரிப்பாளர் தானு விளக்கமளித்துள்ளார்

வடசென்னையை கதைக்களமாக கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் அரசன். வடசென்னை படத்தில் நடித்த ஆண்ட்ரியா , கிஷோர் , சமுத்திரகனி , பிரியங்கா மோகன் , யோகல்ட்சுமி ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார். அரசன் படப்பிடிப்பு ஒரு சில காரணங்களால் தாமதமானது. சின்பு படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவதே படப்பிடிப்பிற்கு காரணம் என பலர் அவரை குற்றம்சாட்டி வந்தார்கள். இது குறித்து முதல்முறையாக அரசன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு யூடியுப் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

சிம்பு குறித்து தயாரிப்பாளர் தானு

தயாரிப்பாளர் தானு கூறுகையில் " சிம்புவை பற்றி அரசன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் பேசலாம் என்றிருந்தேன். ஆனால் இப்போது நீங்கள் கேட்டதால் இதைப் பற்றி சொல்கிறேன். சிம்பு முன்னதாக தேசிங்கு பெரியசாமி படத்திற்காக ஒரு வருடம் நீண்ட தலை முடி வளர்ந்து வந்தார். அரசன் படத்தின் கதையை கேட்டப் பிறகு அந்த படத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அரசன் படத்தின் கதாபாத்திரமாகவே மாறிட்டார். இந்த படத்தினுடைய கதாபாத்திரமாக வாழ்ந்து இயக்குநர் வெற்றிமாறனின் மனதில் இடம்பிடித்துவிட்டார். படப்பிடிப்பு தளத்திற்கு சொன்ன நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே சிம்பு வந்துவிடுவார். ஏன் அந்த தம்பியைப் பற்றி இப்டி சொல்கிறார் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் தான் ஒரு சிங்கிள் டேக் ஆர்டிஸ்ட் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க வேண்டும் என்று ஆசையாக கேட்டுக்கொண்டார்.

கோவில்பட்டியில் படப்பிடிப்பு நடந்தபோது அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது உண்மைதான். அதுவும் இயக்குநரே பார்த்து அவரை ஓய்வு எடுக்கச் சொல்லி அனுப்பி வைத்தார். அரசன் திரைப்படம் நிச்சயம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும். படத்தில் இயக்குநர் என்ன கேட்கிறாரோ அதைவிட மேலாக செய்து இயக்குநரை சந்தோஷப்படுத்த நினைக்கிறார் சிம்பு. சிற்பி செதுக்குவது போல் இந்த படத்தை செதுக்கி வருகிறார்கள் . சமீபத்தில் ஒரு காட்சியை எனக்கு காட்டினார்கள். நேரில் பார்ப்பதை விட திரையில் பார்க்க சிம்பு லட்டு மாதிரி இருக்கிறார் " என தயாரிப்பாளர் தானு தெரிவித்துள்ளார்.

Author : ராகேஷ் தாரா

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu