Dailyhunt
பாடகராக அறிமுகமாகும் நடிகர் இளவரசு...அட இந்த படத்துலயா!

பாடகராக அறிமுகமாகும் நடிகர் இளவரசு...அட இந்த படத்துலயா!

ABP Nadu 2 weeks ago

ட்டி நடராஜ் நடித்து நகைச்சுவை நடிகர் தம்பி ராமையானவின் மகல் உமாபதி ராமையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் TN2026. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி தெவக ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் இளவரசு தான் இந்த படத்தில் பாடியுள்ள பாடலைப் பற்றி பேசினார் .

பாடகராக அறிமுகமாகும் நடிகர் இளவரசு

ஒரு திரைப்படத்தில் நடித்து, அந்த படம் முறையாக வெளியேறி வெற்றி பெறுவது அதை விட பெரிய சந்தோஷம், எங்கள் போன்ற திரைப்படத் துறையினருக்கு வேறு எதுவும் இல்லை. ஒரு படத்தை உருவாக்குவது முக்கியமல்ல, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் மிக முக்கியம். ரவி சார், இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகாக திட்டமிட்டு, படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நீங்கள் எடுத்த முயற்சி, அது உங்கள் சினிமா மீது உள்ள அன்பை தெளிவாக காட்டுகிறது. ஒரு சினிமாக்காரராக, சினிமா எப்போதும் உங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று மனமார வேண்டுகிறேன்.

இந்த படத்தின் இயக்குநர் உமாபதி என் நண்பரின் மகன் என்பதற்காகவோ, எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் என்பதற்காகவோ நான் பாராட்டவில்லை. ஒரு திரைப்படத்தை எப்படி கையாள வேண்டும், அதன் மேலாண்மை, அதன் வடிவமைப்புஎல்லாவற்றையும் தெளிவாக புரிந்துகொண்டு, மிகப் பொறுப்புடன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் படம் பார்க்கும் போது நான் சொல்வதின் அர்த்தம் உங்களுக்கு புரியும்.

புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்களை ஊக்குவிப்பது மிகவும் அவசியம். இந்த படத்தில் அவர்கள் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். இந்த படத்தில் நான் ஒரு பாடல் பாடியிருக்கிறேன், ஒரு நடனம் ஆடியிருக்கிறேன், ஒரு சண்டைக் காட்சியிலும் நடித்திருக்கிறேன். இதற்காக பாடல், நடனம், சண்டை ஆகிய துறைகளில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றி.

நானும், எம். எஸ். கர் சார், ராமையா சார் மூவரும் இந்த வயதில் பல அனுபவங்களை கடந்து வந்தவர்கள். அதனால் போட்டி, பொறாமை போன்றவற்றை தாண்டி, ஒரு உணர்ச்சிப்பூர்வமான உறவோடுஇந்த படத்தில் நடித்துள்ளோம். இயக்குநர் உமாபதி இந்த படத்தில் கதை, வசனம், அனைத்திலும் அக்கறையுடன் உழைத்துள்ளார். படம் மிகவும் சுவாரஸ்யமாக உருவாகியுள்ளது. டிரெய்லர் பார்த்த பிறகு பல கேள்விகள் எழுந்திருக்கும். அந்த கேள்விகள் இன்னும் அதிகரித்தால், அது எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த படம் ஓடி, வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் ஆசை. இந்த படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படம் பற்றி இன்னும் நிறைய பேச வேண்டியுள்ளது. ஆனால் அதை நீங்கள் திரையரங்கில் பார்த்து அனுபவிக்க வேண்டும் என நினைக்கிறேன்இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நன்றி."

TN2026 வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது

Author : ராகேஷ் தாரா

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu