Dailyhunt
பைனான்ஸ் தகராறில் கர்ப்பிணி பெண்ணை ஆபாசமாக  பேசிய ஊழியர்! சிறுவனை WWE பாணியில் தாக்கிய அதிர்ச்சி சம்பவம்

பைனான்ஸ் தகராறில் கர்ப்பிணி பெண்ணை ஆபாசமாக பேசிய ஊழியர்! சிறுவனை WWE பாணியில் தாக்கிய அதிர்ச்சி சம்பவம்

ABP Nadu 1 week ago

திருப்பத்தூர்: பைனான்ஸ் கட்டவில்லை என கர்ப்பிணி பெண்ணை தகாத வார்த்தையில் பேசிய ஊழியரை தட்டிக் கேட்கச் சென்ற சிறுவனை தூக்கி ஊழியர் பந்தாடிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WWE யை மிஞ்சிய இந்த சம்பவம்

திருப்பத்தூர் மாவட்டம் கதிரி மங்கலம் அடுத்த நேருஜி நகர் பகுதியை சேர்ந்த ராஜி மனைவி புவனேஸ்வரி (29). இவர் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள பெல் ஸ்டார் நிதி நிறுவனத்தில் ரூ.50,000 பைனான்ஸ் எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அனைத்து தவணைகளையும் முறையாக கட்டிய நிலையில் ரூ.5,500 மட்டும் தற்போது வருகின்ற நான்காம் தேதி கட்ட வேண்டும் என கூறப்படுகிறது. அந்த தவணையை தற்போதே கட்ட வேண்டும் என கூறி ஊழியர் புவனேஸ்வரியின் வீட்டிற்கு சென்று பணம் கேட்டு கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த புவனேஸ்வரியின் உறவுக்கார சிறுவன் செழியன்(16) என்பவர் எதற்கு ஆபாசமாக பேசுகிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பைனான்ஸ் ஊழியர் திடீரென அந்த சிறுவனை சரமாரியாக தாக்கி WWEல் வருவது போல தலைக்கு மீது தூக்கி போட்டு பந்தாடினார்.

இதன் வீடியோ அருகே உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் காட்சிகள் பதிவாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனால் காயமடைந்த சிறுவன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Author : ராஜேஷ். எஸ்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu