Dailyhunt
பெண்களைப் போல பிரச்சார பீரங்கிகள் கிடையாது - விக்கிரவாண்டி பரப்புரையில் பொன்முடி புகழாரம்!

பெண்களைப் போல பிரச்சார பீரங்கிகள் கிடையாது - விக்கிரவாண்டி பரப்புரையில் பொன்முடி புகழாரம்!

ABP Nadu 1 week ago

விழுப்புரம் : விக்கிரவாண்டி தொகுதியில் முதல்வர் ஸ்டாலினே நிற்பதாக நினைக்க வேண்டும், பெண்கள் வாக்களித்தால் மட்டும் போதாது.

உங்கள் கணவரிடமும் கூறி அவர்களையும் வாக்களிக்க செய்ய வேண்டும். பெண்களைப் போல பிரச்சார பீரங்கி வேறு யாரும் இருக்க முடியாது. விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேச்சு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிடும் அந்நியூர் சிவா, முன்னாள் அமைச்சர் பொன்முடியுடன் சென்று விக்கிரவாண்டி நகரப் பகுதியில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பழைய தபால் நிலைய பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் பொன்முடி.,

அன்னியூர் சிவா வேட்பாளர் அல்ல விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர். லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்பது உறுதியாகியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டில் தமிழ்நாடே வியந்து பார்க்கும் அளவிற்கு விழுப்புரம் மாவட்டம் வளர்ச்சி பெற்றுள்ளது. அன்னியூர் சிவா நினைத்ததை செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர். இன்றைக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த புகழேந்தியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள். அவர் விட்டுச் சென்ற பணிகளை மிக துரிதமாக செய்து வருபவர் அன்னியூர் சிவா. இந்த தொகுதியில் அன்னியூர் சிவா நிற்பதாக எண்ணக்கூடாது. முதல்வர் ஸ்டாலினே நிற்பதாக நினைத்துக் வேண்டும்.

இந்த தொகுதியில் எதிர்த்து நிற்பவர்களை பற்றி அதிகம் பேச வேண்டிய அவசியம் இல்லை. அவர்களால் எதையும் செய்து காட்ட முடியாது. பெண்கள் மட்டும் வாக்களித்தால் போகாது. உங்கள் கணவரிடமும் கூறி அவர்களையும் வாக்களிக்க வைக்க வேண்டும். பெண்கள் கூறினால், கணவர்கள் பேச்சை மீறமாட்டார்கள். அன்னியூர் சிவாவுக்கு வாக்களிக்கவில்லை என்றால் சோறு போட மாட்டோம் என கணவர்களை பெண்கள் மிரட்டவும் செய்வீர்கள். பெண்களைப் போல, ஆற்றல் மிக்க, பிரச்சார பீரங்கிகள் இருக்க முடியாது. தேர்தலுக்கு மிகக் குறுகிய நாட்களே உள்ளது. 15 நாட்களே உள்ளது. அன்னியூர் சிவா மட்டுமல்ல, இனி விக்கிரவாண்டி சிவா என மாறியுள்ளார்.

Author : சிவரஞ்சித்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu