வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்
சென்னை பெரம்பூர் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கொளத்தூர் , எழும்பூர் , துறைமுகம் , திரு.வி க நகர் , பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி , பின்னர் அவர்களுக்கு ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அன்புமணி ராமதாஸ் பேசுகையில் ;
விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தது திமுகவிற்கு எதிராக தான் ஆனால் தற்பொழுது பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடன் சேர்ந்து உள்ளார் விஜயகாந்தின் ஆன்மா அவர்களை மன்னிக்காது.
திமுக கூட்டணியில் திருமாவளவன் ஐந்து வருடங்களாக வாய் பேச முடியாமல் அசிங்கப்பட்டுள்ளார். மேலும் தற்பொழுது திமுகவில் இணைந்த தே.மு.தி.கவிற்கு 10 தொகுதிகளும் நீண்ட காலமாக உள்ள விடுதலை சிறுத்தை கட்சிக்கு குறைந்த தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களை கடுமையான விமர்சனம் செய்த அன்புமணி
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட தொடங்கவில்லை டாஸ்மார்க் கடைகளுக்கு ஒரு கடைக்கு ஐந்து ஊழியர்கள் உள்ளனர். ஆனால் பள்ளிக் கூடத்திற்கு ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர்.
அமைச்சர்கள் வியாபாரிகளாக உள்ளனர் முதல் வியாபாரி எ.வ.வேலு, இரண்டாவது வியாபாரி சேகர்பாபு, மூன்றாவது வியாபாரி செய்தில் பாலாஜி, நான்காவது வியாபாரி கே.என்.நேரு
மக்கள் பனையூருக்கு செல்ல வேண்டும்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வேனில் வருவார் வேனில் செல்வார் ஆனால் திலகபாமா உங்கள் வீட்டு வாசலில் இருப்பார் அதே போன்று விஜய் வெற்றி பெற்றால் நீங்கள் பனையூர் வாசலுக்கு செல்ல வேண்டும் ஆனால் திலகபாமா உங்கள் வீட்டு வாசலில் உங்களுடன் நிற்பார் என கூறினார்.
Author : சேர்மசாமி

