தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 18 முதல் 20 சதவிகித வாக்குகளை பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் அனைத்து கருத்து கணிப்புகளையும் பொய்யாக்கும்படி தவெக 108 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
ஆளும் கட்சியான திமுக 64 தொகுதிகளிலும் அதிமுக 62 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இரண்டு தொகுதிகளிலும் விஜய் முன்னிலை
தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார் . பெரம்பூரில் 34482 வாக்குகளைப் பெற்று 13574 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார். அதேபோல் திருச்சி கிழக்கில் 24884 வாக்குகள் பெற்று 9639 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார். தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ள நிலையில் தவெகவினர் இனிப்பு வழங்கியும் விசில் ஊதியும் கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளார்கள். அதே நேரம் விஜயின் வீட்டிலும் வெற்றிக் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.
விஜய் வீட்டிற்கு வந்த த்ரிஷா
இன்னொரு பக்கம் நடிகை த்ரிஷா தவெக வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்க நடிகர் விஜய் வீட்டிற்கு வருகை தந்துள்ளார் . நடிகை த்ரிஷா நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு சென்றுள்ளார். முன்னதாக நடிகை த்ரிஷா இன்று காலை திருப்பதியில் சாமி தரிசம் மேற்கொண்டார். தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளான இன்று த்ரிஷா தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். முன்னதாக த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த மாதம் தனக்கான மாதம் என பதிவிட்டிருந்தார். தேர்தலுக்கு முன்பு வரை விஜய் மற்றும் த்ரிஷாவை வைத்து பல்வேறு வதந்திகள் வெளியாகி வந்தன. விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பெரியளவில் பேசுபொருளானது. இந்த விமர்சனங்கள் எல்லாம் விஜய்க்கு தேர்தலில் வெற்றி வாய்ப்பை குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
Author : ராகேஷ் தாரா

