Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
''போகணும்னா போங்க..'' காங்கிரஸுக்கு டாட்டா காட்டிய திமுக! அனல் பறக்கும் அரசியல் களம்..

''போகணும்னா போங்க..'' காங்கிரஸுக்கு டாட்டா காட்டிய திமுக! அனல் பறக்கும் அரசியல் களம்..

ABP Nadu 2 weeks ago

போகனும்னு முடிவு பண்ணிட்டா போங்க. அதுக்கு காரணம் தேடி பொய் எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் எதுவும் இல்லை'' என்று காங்கிரஸுக்கு திமுக பதில் அளித்துள்ளது.

தமிழ்நாட்டு அரசியல் களம் முன்னெப்போதையும் விட பரபரப்பாக இயங்கி வருகிறது. முதல் முறையாக தவெக களமிறங்கி, ஆட்சியையும் பிடித்து உள்ள நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தவெக பக்கம் சாயுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

தவறு ஏதுமே இல்லாமல் பக்க விளைவுகளைச் சந்தித்தோம்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் கூறும்போது, ’’திமுக அரசுக்கு எதிராக மக்கள் தீர்ப்பு வந்துள்ளது. அமைச்சரவையில் பாதிக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தோல்வியைச் சந்தித்துள்ளனர். எங்கள் தவறு ஏதுமே இல்லாமல், நாங்கள் பக்க விளைவுகளைச் சந்தித்தோம். இப்போது, ​​பாஜக தமிழ்நாட்டைக் குறிவைத்துள்ளது.

நமக்கு முன்னால் உள்ள கேள்வி தெளிவாக உள்ளது. மக்கள் தீர்ப்பால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் நாம் நிற்க வேண்டுமா, அல்லது பாஜகவுக்கு எதிராகப் போராடிய சக்தியுடன் ஒன்றிணைந்து, தமிழ்நாட்டை பாஜக ஆள்வதைத் தடுக்கப் போராட வேண்டுமா? என்று மாணிக்கம் தாக்கூர் எம்.பி. கேள்வி எழுப்பி இருந்தார்.

போகனும்னு முடிவு பண்ணிட்டா போங்க

இந்த நிலையில் இதற்கு தர்மபுரி முன்னாள் எம்.பி.யும் பாலக்கோடு திமுக வேட்பாளருமான செந்தில்குமார் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ’’போகனும்னு முடிவு பண்ணிட்டா போங்க. அதுக்கு காரணம் தேடி பொய் எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் எதுவும் இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே “வெற்றி நிச்சயம்! வெற்றி நிச்சயம்! தோற்றாலும் தோல்வியில்லை — நம்மிடம்!” பாரதியார் என்றும் மாணிக்கம் தாக்கூர் பதிவிட்டு இருந்த்து குறிப்பிடத்தக்கது.

Author : க.சே.ரமணி பிரபா தேவி

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu