Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பூங்கொத்துடன் வீட்டிற்கு வந்த விஜயின் ஜோதிடர்! அடேங்கப்பா வரவேற்ப பாருங்க

பூங்கொத்துடன் வீட்டிற்கு வந்த விஜயின் ஜோதிடர்! அடேங்கப்பா வரவேற்ப பாருங்க

ABP Nadu 3 weeks ago

மிழ்நாட்டின் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தேர்தல் வாக்கு முடிவுகள் இப்போது ( மே 4 ஆம் தேதி ) எண்ணப்பட்டு வருகின்றன . இதில் ஆச்சரியப்படுத்தும் விதமாக தவெக தமிழ்நாடு முழுவதும் முன்னிலை வகித்து வருகிறது , இரண்டாம் இடத்தை அதிமுக பெற்றுள்ள நிலையில் , மூன்றாம் இடத்துக்கு ஆளும் கட்சியான திமுக பெற்றுள்ளது .

10 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 103 தொகுதிகளில் முன்னிலை வகுத்து வருகிறது. இரண்டாவது இடத்தில் அதிமுக 68 தொகுதிகளிலும் ஆளும் கட்சியான திமுக 56 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்து வரும் நிலையில் கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமே விஜயின் ஆஸ்தான் ஜோதிடர் ராதன் பண்டித் விஜய் வீட்டிற்கு பூங்கொத்துடன் சென்றுள்ளார். விஜயின் ஆஸ்தான் ஜோதிடரும் தவெகவின் செய்தி தொடர்பாளருமான ராதன் பண்டித் இந்த தேர்தலில் தவெக ஆட்சி அமைக்கும் என தொடர்ச்சியாக கூறி வந்தார். காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டிற்கு ராதன் பண்டித் வருகை தந்தார். அவரை சற்றும் காக்க வைக்காமல் வீட்டிற்குள் அனுமதித்தார் விஜய்.

Author : ராகேஷ் தாரா

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu