Budget SUVs EMI: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாதாந்திர விற்பனையில் எஸ்யுவிக்கள் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது.
குறைந்த EMI-யில் கிடைக்கும் எஸ்யுவிக்கள்:
பட்ஜெட்டில் எஸ்யுவி கார் வாங்கும் திட்டத்தை பரிசீலிக்கிறீர்கள் என்றால், உங்களுக்கான சரியான இடத்தை தான் நீங்கள் அடைந்து இருக்கிறீர்கள். குறைந்த பட்ஜெட்டில் ஒரு SUV வாங்குவது என்பது அதன் எக்ஸ்-ஷோரூம் விலையை மட்டும் சார்ந்தது அல்ல. மாதாந்திரத் தவணையே வாங்கும் திறனை அளவிடுவதற்கான ஒரு நடைமுறைக்கு உகந்த அளவுகோலாகும். பல காம்பேக்ட் SUV-கள் அல்லது காம்பேக்ட் க்ராஸ் ஓவர்களை ஒப்பீட்டளவில் குறைந்த மாதாந்திரத் தவணைகளில் வாங்க முடியும். அந்த வகையில் இந்தியாவில் விலைகளின் அடிப்படையில் அல்லாமல் மிகவும் குறைந்த மாதாந்திர தவணை திட்டத்தில் கிடைக்கும் 10 மலிவான எஸ்யுவிக்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
டாப் 10 மலிவான எஸ்யுவிக்கள்:
| கார் மாடல் | EMI-தொகை | கடன் தொகை | முன்பணம் | கடனை செலுத்த அவகாசம் | வட்டி விகிதம் |
| ஹுண்டாய் எக்ஸ்டர் | ரூ 12,223 | ரூ 5.78 லட்சம் | ரூ 64,000 | 60 மாதங்கள் | 9.8% |
| நிசான் மேக்னைட் | ரூ 12,231 | ரூ 5.78 லட்சம் | ரூ 64,000 | 60 மாதங்கள் | 9.8% |
| ரெனால்ட் கைகர் | ரூ 12,304 | ரூ 5.82 லட்சம் | ரூ 64,680 | 60 மாதங்கள் | 9.8% |
| டாடா பஞ்ச் | ரூ 14,883 | ரூ 5.90 லட்சம் | ரூ 66,000 | 60 மாதங்கள் | 9.8% |
| மாருதி ஃப்ராங்க்ஸ் | ரூ 15,384 | ரூ 7.28 லட்சம் | ரூ 80,840 | 60 மாதங்கள் | 9.8% |
| மாருதி ப்ரேஸ்ஸா | ரூ 15,788 | ரூ 7.47 லட்சம் | ரூ 83,000 | 60 மாதங்கள் | 9.8% |
| ஸ்கோடா கைலாக் | ரூ 16,338 | ரூ 7.73 லட்சம் | ரூ 85,853 | 60 மாதங்கள் | 9.8% |
| கியா சோனெட் | ரூ 16,629 | ரூ 7.86 லட்சம் | ரூ 87,000 | 60 மாதங்கள் | 9.8% |
| டொயோட்டா டைசர் | ரூ 16,847 | ரூ 7.97 லட்சம் | ரூ 89,000 | 60 மாதங்கள் | 9.8% |
| ஹுண்டாய் வென்யு | ரூ 17,674 | ரூ 8.36 லட்சம் | ரூ 93,000 | 60 மாதங்கள் | 9.8% |
மேற்குறிப்பிடப்பட்டுள்ள மாதாந்திர தவணை புள்ளிவிவரங்களின்படி, ஆரம்ப EMI அடிப்படையில் நிதியுதவி பெறுவதற்கு இந்தியாவில் மிகவும் மலிவான SUV-ஆக ஹுண்டாய் எக்ஸ்டர் விளங்குகிறது. இது நிசான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகியவற்றை விட சற்றே அதிகமாகும். இந்த பட்டியலில் ஹுண்டாய் வென்யு, டொயோட்டா டைசர் மற்றும் கியா சோனெட் ஆகிய மாடல்கள் கடைசி 3 இடங்களில் உள்ளன. இந்த கார் மாடல்களின் ஆன் - ரோட் விலை நகரங்களுக்கு ஏற்ப மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
EMI கணக்கிடப்பட்டது எப்படி?
பட்டியலிடப்பட்டுள்ள மாதாந்திர தவணை திட்டங்கள், நம்பகமான ஆன்லைன் தளங்களிலிருந்து கிடைக்கும் நிதித் தகவல்களின் அடிப்படையில் வகுக்கப்பட்டவையாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல், ஆன்-ரோட் விலை, முன்பணம், கடன் தொகை மற்றும் தவணைக்காலம், வட்டி விகிதம், கடன் தகுதி விவரம் மற்றும் பொருந்தக்கூடிய கட்டணங்களைப் பொறுத்து உண்மையான மாதாந்திர தவணை தொகைகள் மாறுபடலாம். எக்ஸ்-ஷோரூம் விலைகள் மற்றும் EMI தொகையும் காலப்போக்கில் மாறக்கூடும். வாங்கும் முடிவை எடுப்பதற்கு முன், பயனர்கள் அங்கீகரிக்கப்பட்ட டீலர், கடன் வழங்குநர் அல்லது அந்தந்த கார் தயாரிப்பாளரிடம் சமீபத்திய விலைகள், EMI தொகைகள், முன்பணம், வட்டி விகிதங்கள் மற்றும் கடன் விதிமுறைகள் குறித்து கேட்டறிவது நல்லது.
Author : குலசேகரன் முனிரத்தினம்

