Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 9 (09.07.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.?

Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 9 (09.07.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.?

ABP Nadu 1 week ago

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(09.07.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம்.

பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூலை 9-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமாபுரம்

  • செந்தமிழ் நகர்
  • கண்ணதாசன் நகர்
  • கோத்தாரி நகர்
  • அன்னை சத்யா நகர்
  • ராகவேந்திரா நகர்
  • நரசிம்மன் நகர்
  • ராஜேஸ்வரி நகர்
  • அனீஷ் நகர்

முடிச்சூர்

  • பரத்வாஜ் நகர்
  • தனசெல்வி நகர்
  • பிடிசி குவார்ட்டர்ஸ்
  • வரதராஜபுரம்
  • ராயப்பா நகர்
  • தர்காஸ்ட் ரோடு
  • நடுவீரப்பட்டு

திருமுடிவாக்கம்

  • எருமையூர்
  • கிரஷர் ஏரியா
  • கிஷ்கிந்தா மெயின் ரோடு
  • ராஜீவ் நகர்
  • ஷோபா குயின்ஸ்லாந்து
  • இ.கே அவென்யூ
  • ஜி.ஆர் நகர்

ஆவடி

  • திருமுல்லைவாயல்
  • திருவள்ளுவர் தெரு
  • சுப்ரமணியர் நகர்
  • திருமலை நகர்
  • குளக்கரை தெரு
  • மாசிலாமணீஸ்வர் நகர்
  • எட்டியம்மன் நகர்
  • வைஷ்ணவி நகர் 1-3-வது தெருக்கள்
  • சாந்திபுரம்
  • சோழம்பேடு சாலை
  • சிடிஎச் சாலை
  • கணேஷ் நகர்
  • விஓசி நகர்
  • வேணுகோபால் நகர்
  • நேதாஜி நகர்
  • பாலாஜி நகர்
  • கலைஞர் நகர்
  • கோவில்பதாகை பிரசான சாலை
  • பூம்பொழில் நகர்
  • மசுதி தெரு
  • கன்னட பாளையம்

பெசன்ட் நகர்

  • 7-வது அவென்யூ
  • ருக்குமணி சாலை
  • டைகர் வரதாச்சாரியார் சாலை
  • பீச் ரோடு
  • அருண்டேல் பீச் ரோடு
  • எம்.ஜி.ஆர் சாலை

பூந்தமல்லி

  • ஜே.ஜே.நகர்
  • குமரன் நகர்
  • லீலாவதி நகர்
  • ஏரிக்கரை ரோடு
  • ஆவடி மெயின் ரோடு
  • சென்னீர்குப்பம் கண்ணபாளையம்
  • ஆயில்சேரி
  • பாரிவாக்கம்
  • பிடாரிதாங்கல்
  • பனவேடுதோட்டம்
  • கொளப்பஞ்சேரி
  • செம்பரம்பாக்கம் நாசரத்பேட்டை கிராமம்
  • அகரம்மேல்
  • மலையம்பாக்கம்

TI சைக்கிள்ஸ்

  • ராமாபுரம்
  • வரதராஜபுரம்
  • ரயில் நிலைய சாலை
  • பட்டரவாக்கம் சாலை
  • சம்தாரியா நகர்
  • ஓ.வி அழகேசன் நகர்

மாங்காடு

  • ஆவடி சாலை
  • மகிழம் அவென்யூ
  • பூஞ்சோலை வீதி
  • எம்எஸ்எஸ் நகர்
  • அட்கோ நகர்
  • மேட்டுத் தெரு
  • சிப்பாய் நகர்
  • தந்தை பெரியார் நகர்
  • காமராஜ் நகர்
  • முருகப்பிள்ளை நகர்
  • கங்கை அம்மன் கோயில் தெரு
  • விநாயகா நகர்
  • கோரிமேடு
  • பஜார் தெரு
  • கண்ணம்புள்ளி செட்டி தெரு
  • அம்மன் கோவில் தெரு
  • குன்றத்தூர் சாலை

அடையார்

  • கால்வாய்க் கரை சாலை

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Author : ஸ்ரீராம் ஆராவமுதன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu