TVK Vijay: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தற்போது பனையூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பனையூரில் தவெக விஜய்:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவில் 108 இடங்களில் வென்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது. அனாலும், மெஜாரிட்டி இல்லாததால், ஆட்சியமைக்க இன்னும் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதற்காக யார் யாரிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என அக்கட்சியின் தலைவர் விஜய் ஆலோசித்து வருகிறார். பனையூரில் கட்சி நிர்வாகிகள் மற்றும் வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் காலை முதல் கலந்தாலோசித்து வருகிறார். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும், அதைதொடர்ந்து கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் தனியார் விடுதியில் தங்கவைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விஜய் வீடு மாற திட்டம்?
பனையூரில் வசித்து வரும் விஜய், அதே பகுதியில் தான் தனது கட்சியின் தலைமை அலுவலகத்தையும் நிறுவியுள்ளார். இதன் காரணமாகவே ஒவ்வொரு முறையும் அரசியல் பயணங்களுக்காக நீண்ட தூரம் பயணித்து தலைநகர் சென்னைக்கு வரவேண்டியுள்ளது. இதனை சுட்டிக்காட்டியே, "பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றாலும், மக்களால் அவரை அணுக முடியாது" என சில அரசியல் தலைவர்கள் விமர்சித்தனர். முன்பு கட்சி பணிகள் மட்டுமே இருந்ததால், பனையூரில் தங்கி இருந்து அவற்றை கையாள்வது மிகவும் எளிதான காரியமாக இருந்தது. ஆனால், தற்போது முதலமைச்சராகவும் பொறுப்பேற்க உள்ளதால், ஒவ்வொரு முறையும் தலைமை செயலகத்தில் இருந்து பனையூர் வரை பயணிப்பது மிகவும் சிரமமானதாகவும், நேரய விரயமாகவும் இருக்கும். எனவே காலத்தின் முக்கியத்துவத்தை கருதி விஜய் பனையூரிலிருந்து, சென்னை நகருக்குள் தனது வசிப்பிடத்தை மாற்றுவார் என கூறப்படுகிறது.

