Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
CM Vijay: கையகப்படுத்தப்பட்ட பரந்தூர் நிலங்கள்! திருப்பித் தருமா தவெக அரசு? விஜய்யின் முடிவு என்ன?

CM Vijay: கையகப்படுத்தப்பட்ட பரந்தூர் நிலங்கள்! திருப்பித் தருமா தவெக அரசு? விஜய்யின் முடிவு என்ன?

ABP Nadu 1 week ago

மிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் கடந்த ஆட்சியில் திமுக அரசுக்கு எதிராக மிகப்பெரிய கரும்புள்ளியாக அமைந்தது பரந்தூர் விமான நிலைய விவகாரம்.

சென்னை விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டத்திற்காக பரந்தூரில் 3 ஆயிரத்து 700 ஏக்கர் அளவிலான நிலத்தில் விமான நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம்:

இதற்கான பணிகளை மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வந்தது. பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மிகவும் தீவிரமாக குரல் கொடுத்து வந்தவர் தவெக தலைவர் விஜய். தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள விஜய், பரந்தூர் விமான நிலைய பணிகளை தொடர்வதற்கு தடை விதித்துள்ளார்.

நிலத்தை திருப்பித் தருமா?

கடந்த ஆட்சியில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக சுமார் 1700 ஏக்கர் நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த சூழலில், இந்த நிலத்தை தமிழக அரசு நிலத்தின் உரிமையாளர்களுக்கு திருப்பித் தருமா? அல்லது அரசே தங்கள் வசம் வைத்துக்கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்தது.

ஏனென்றால், இந்த நிலத்தை கடந்த ஆட்சியில் நில எடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு கையகப்படுத்தவில்லை. 1700 ஏக்கர் நிலங்களும் அந்தந்த நில உரிமையாளர்களின் சம்மதத்துடன் அரசுக்கு நேரடியாக பதிவு செய்து தரப்பட்டுள்ளது. இதனால், தற்போது அந்த நிலத்தை அரசு திருப்பித் தருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவே ஆகும்.

புதிய தொழிற்பூங்காவா?

தற்போது கையகப்படுத்தப்பட்ட அந்த 1700 ஏக்கர் நிலத்தில் புதிய தொழிற்பூங்கா அமைக்கலமா? என்று தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. நிலத்தை கொடுத்த உரிமையாளர்கள் சிலர் தங்கள் நிலம் மீண்டும் தங்களுக்கு திரும்ப கிடைக்குமா? என்றும் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. நிலத்தை அரசுக்கு அளித்த உரிமையாளர்களுக்கு அரசின் சார்பில் அதற்கான தொகை வழங்கபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அரசு நிலத்தை திரும்ப வழங்கினாலும், அவர்கள் பெற்ற தொகையை மீண்டும் அரசுக்கு செலுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

இதனால், இந்த விவகாரத்தில் அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது? என்பது முக்கியமானது ஆகும். பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னை புறநகரில் புதிய விமான நிலையம் வேறு ஏதேனும் அமைக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அல்லது சென்னை விமான நிலையமே விரிவாக்கம் செய்யப்படுமா? இல்லாவிட்டால் இதே இட வசதியுடன் சென்னை விமான நிலையம் இயங்குமா? என்ற கேள்வியும் உருவாகியுள்ளது.

Author : சுகுமாறன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu